மிரண்டு போன மார்க்கெட்.. 50MP கேமரா.. 30W சார்ஜிங்.. அறிமுகமானது புதிய Moto 5ஜி போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட், 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புத்தம் புதிய மோட்டோ போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த புதிய மோட்டோ ஜி85 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
மோட்டோ ஜி85 5ஜி அம்சங்கள் (Moto G85 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் பிஒஎல்இடி (curved pOLED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (1,600 nits peak brightness) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த மோட்டோ போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. அதேபோல் இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)கொடுக்கப்பட்டுள்ளது.
தரமான ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த சாதனம். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio,), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோபோன்கள் (dual microphones) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த மோட்டோ ஜி85 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30 வாட்ஸ் டர்போசார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), புளூடூத் 5.1 (Bluetooth 5.1) ஜிபிஎஸ் (GPS), சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
ஆனால் மோட்டோ ஜி85 5ஜி போன் ஐரோப்பாவில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் விலை £299.99 (இந்திய மதிப்பில் ரூ.31,767)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications