5000mAh பேட்டரி கொண்ட இந்த Moto 5G போன் மீது ரூ.4,000 டிஸ்கவுண்ட்.. ஆர்டர் பிச்சு உதறுது!
ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு.. ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகமான மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G) ஸ்மார்ட்போன் ஆனது இன்று வரையிலாக நல்ல முறையில் விற்பனையாகும் 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போது இதன் விற்பனையை இன்னும் சூடுபிடிக்க வைக்கும்படியாக ரூ.4000 நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை பிளிப்கார்ட் (Flipkart) வலைதளத்தில் நடக்கும் பசாட் டேஸ் (Big Bachat Sale) என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக கிடைக்கிறது. டிசம்பர் 5 ஆம் தேதியோடு முடிவடைய உள்ள இந்த விற்பனையின் கீழ் மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் அசல் விலையான ரூ.21,999 க்கு பதிலாக ரூ.3000 தள்ளுபடியை பெற்று ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இதன் மீது கூடுதலாக ரூ.1000 பேங்க் ஆபரும் கிடைக்கிறது. இப்படியாக மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் மீது முழுதாக ரூ.4000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதேபோல, இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனும் கூட அதன் அசல் விலையான ரூ.22,999 க்கு பதிலாக ரூ.3000 நேரடி தள்ளுபடியை (Instant Discount) பெற்று ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் மீதும் கூடுதலாக ரூ.1000 பேங்க் ஆபர் கிடைக்கிறது.
மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் 1600 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67 இன்ச் எப்எச்டி பிளஸ் கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 6s Gen 3) சிப்செட் உடனாக அட்ரெனோ 619 ஜிபியு உடன் கிராபிக்ஸ் கொண்டு இயங்குகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இது 12ஜிபி ரேவரையிலான ம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஓஐஎஸ் ஆதரவு உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 8எம்பி மேக்ரோ-டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை இது 33W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஓஎஸ்-ஐ பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான மை யுஎக்ஸ் (My UX) கஸ்டம் ஸ்கின் கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 வருட சாஃப்ட்வேர் அப்டேட்களும், 3 வருட செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், டால்பி அட்மோஸ் மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் போன்ற அம்சங்களும் உள்ளன, உண்மையில் இது மோட்டோ ஜி84 மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆகும். இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை பொறுத்தவரை மோட்டோ ஜி84 மாடலில் 6.55 இன்ச் டிஸ்பிளே உள்ளது; மோட்டோ ஜி85 மாடலில் சற்றே பெரிய 6.67 இன்ச் டிஸ்பிளே உள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை, ஜி84 மாடலில் ஸ்னாப்டிராகன் 695 பேக் செய்யப்பட்டுள்ளது. ஜி85 மாடலில் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட் உள்ளது. கடைசியாக மோட்டோ ஜி85 மாடலின் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் 33W ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது மற்றும் ஜி85 மாடலில் கூடுதலாக ஒரு கேமரா சென்சார் சேர்க்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








