மிரளவிட்ட விற்பனை.. பட்ஜெட்ல OIS கேமரா.. pOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அல்ட்ரா பிக்சல் டெக் கேமரா, பிஓஎல்இடி டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 30W டர்போ சார்ஜிங், ஆக்டா கோர் சிப்செட் போன்ற மிட்-பிரீமியம் பீச்சர்களை கொண்ட மோட்டோ ஜி84 5ஜி (Moto G84 5G) போனானது, பிளிப்கார்ட் விற்பனையில் பட்ஜெட்டில் கிடைக்கிறது.
இந்த மோட்டோ ஜி84 5ஜி மாடலானது, ரூ.19,999 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இப்போது விலை குறைப்பில் ரூ.18,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) கூடுதலாக பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, அதைவிட கம்மி பட்ஜெட்டில் வாங்கலாம்.

டிஸ்பிளே, கேமரா, பேட்டரி மட்டுமல்லாமல், வேகன் லெதர் பேனல் டிசைனில் பின்னிப்பெடல் எடுக்கிறது. பட்ஜெட்டில் பிரீமியம் லுக் மற்றும் மிட்-பிரீமியம் பீச்சர்களை விரும்பும் ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்ற இந்த மோட்டோவின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.
மோட்டோ ஜி84 5ஜி அம்சங்கள் (Moto G84 5G Specifications): இந்த மோட்டோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்டு மை யுஎக்ஸ் (My UX) வருகிறது. அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் உடன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் 5ஜி எஸ்ஓசி சிப்செட் வருகிறது.
இந்த சிப்செட் மற்றும் கிராபிக்ஸ் மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும். இந்த மோட்டோவில் அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology) கொண்ட 50 எம்பி மெயின் + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா (மேக்ரோ & டெப்த் ஆப்ஷன்) வருகிறது. மேலும், ஓஐஎஸ் (OIS) டெக்னாலாஜி சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ஆட்டோ நைட் விஷன் (Auto Night Vision), சூப்பர் ஸ்லோவ் மோஷன் (Super Slow Motion) போன்ற பிரத்யேக பீச்சர்களுடன் ஃபுல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் கொண்டிருக்கிறது. ஆட்டோ ஸ்மைல் கேப்சர் (Auto Smile Capture), கெஸ்சர் கேப்சர் (Gesture Capture), செல்பீ போட்டோ மிரர் (Selfie Photo Mirror) பீச்சர்களுடன் 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த கேமராவை போலவே பட்டையை கிளப்பும் டிஸ்பிளே பீச்சர்கள் வருகின்றன. 6.55 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளே ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.
இதுவொரு மிட்-ரேஞ்ச் மாடலாகும். ஆகவே, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஒரே வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் வருகிறது. இந்த மோட்டோ ஜி84 5ஜி போனில் 30W டர்போசார்ஜிங் (Turbocharging) சப்போர்ட் வருகிறது.
டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. மிட்-பிரீமியம் போன்களில் வரும் IP54 வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. இந்த மோட்டோவில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் உள்ளது. 3 கலர்களில் கிடைக்கிறது.
மிட்நைட் ப்ளூ (Midnight Blue), மார்ஷ்மெல்லோ ப்ளூ (Marshmallow Blue), விவா மெஜெந்தா (Viva Magenta) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பிளிப்கார்ட்டில் இந்த மோட்டோவின் விலை ரூ.18,999ஆக இருக்கிறது. இப்போது, எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுக்கு ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரூ.17,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








