Home
Mobile

வாங்குறதுக்கு தவம் கெடக்கலாம்.. P-OLED டிஸ்பிளே, 50எம்பி கேமரா.. வருகிறது 2 Moto போன்கள்.! என்ன மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ எட்ஜ் 40 நியோ மற்றும் மோட்டோ ஜி84 5ஜி போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த இரண்டு போன்களும் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மோட்டோ எட்ஜ் 40 நியோ மற்றும் மோட்டோ ஜி85 5ஜி போன்கள் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

டிடிஆர்ஏ (TDRA) மற்றும் எஃப்சிசி (FCC) உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் இணையதளங்களில் இந்த மோட்டோ எட்ஜ் 40 நியோ மற்றும் மோட்டோ ஜி84 5ஜி போன்கள் காணப்பட்டுள்ளது. குறிப்பாக மோட்டோ ஜி84 5ஜி போனின் மாடல் நம்பர் XT2347-2 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எட்ஜ் 40 நியோ போனின் மாடல் நம்பர் XT2307-1 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு போன்களின் முக்கிய விவரக்குறிப்புகள் கூட ஆன்லைனில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போன்களின் அம்சங்களைப் பார்ப்போம்.

P-OLED டிஸ்பிளே, 50எம்பி கேமரா.. வருகிறது 2 Moto போன்கள்.! என்ன மாடல்?

மோட்டோ ஜி84 5ஜி அம்சங்கள் ( Moto G84 5G specifications): எப்சிசி இணையதளத்தில் வெளியான தகவலின்படி 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் (33W fast charging) வசதியைக் கொண்டு இந்த மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இந்த போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இந்த போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும்.

குறிப்பாக மோட்டோ ஜி84 5ஜி போனில் ஆனது 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. மேலும் இந்த போனில் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. குறிப்பாக கொரோனெட் (Coronet), அம்ரோசியா (Amrosia), அவுட்டர் ஸ்பேஸ் (Outer Space) மற்றும் பாலட் ப்ளூ (Ballad Blue) நிறங்களில் இந்த போன் வெளிவரும்.

மோட்டோ எட்ஜ் 40 நியோ அம்சங்கள் (Moto Edge 40 Neo specifications): 6.5-இன்ச் எச்டி பிளஸ் பி-ஒஎல்இடி (P-OLED) ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது மோட்டோ எட்ஜ் 40 நியோ. ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 300 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

P-OLED டிஸ்பிளே, 50எம்பி கேமரா.. வருகிறது 2 Moto போன்கள்.! என்ன மாடல்?

மீடியாடெக் டைமன்சிட்டி 1050 (Dimensity 1050) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 13 ( Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் வெளிவரும்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன். பின்பு 68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ( 68W fast charging) வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் 5ஜி, வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது மோட்டோ எட்ஜ் 40 நியோ இந்த போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G84 5G to launch soon: Moto Edge 40 Neo spotted on TDRA site: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X