Home
Mobile

லான்ச் ஆக இன்னும் ஒரு நாள்தான் இருக்கு.. pOLED டிஸ்பிளே.. பட்ஜெட் விலை மோட்டோ போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது நாளை மறுநாள் (செப்டம்பர் 1-ம் தேதி) இந்த மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. குறிப்பாக இந்த போன் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மார்ஷ்மெல்லோ ப்ளூ, மிட்நைட் ப்ளூ மற்றும் பான்டோன் கலர்களில் இந்த மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போன் குறைந்த எடையில் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

லான்ச் ஆக இன்னும் ஒரு நாள்தான் இருக்கு.. பட்ஜெட் விலை மோட்டோ போன்.. எ

மோட்டோ ஜி84 5ஜி அம்சங்கள் (Moto G84 specifications): 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-பிட் பிஒல்இடி ( 10-bit pOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி84 5ஜி. மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் ( 1300 nits brightness), 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (360Hz touch sampling rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ள மோட்டோரோலா நிறுவனம். ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் (Octa Core Snapdragon 695 8nm) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும் இந்த மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சக்திவாய்ந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும். அதேபோல் அட்ரினோ 691எல் ஜிபியு ஆதரவும் (Adreno 619L GPU)இந்த போனில் உள்ளது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டு வெளிவரும் இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

அதேபோல் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி, 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது மோட்டோ ஜி84 5ஜி போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.

3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோஃபோன்கள் எனப் பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஐபி54 ((IP54) சான்றிதழ் பெற்றுள்ளது இந்த மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன்.

லான்ச் ஆக இன்னும் ஒரு நாள்தான் இருக்கு.. பட்ஜெட் விலை மோட்டோ போன்.. எ

30 வாட்ஸ் டர்போ சார்ஜிங் உடன் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேோல் இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த அசத்தலான மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி84 5ஜி போன். குறிப்பாக மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G84 5G to launch in India on September 1: Everything we know so far : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X