Home
Mobile

6.55-இன்ச் டிஸ்பிளே, 8GB ரேம், 50MP கேமரா.. இந்தியாவுக்கு வரும் புதிய மோட்டோ போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. தனித்துவமான வடிவமைப்பு, தரமான அம்சங்கள் மற்றும் பட்ஜெட் விலையில் வெளிவரும் இந்த அசத்தலான மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக மார்ஷ்மெல்லோ ப்ளூ, மிட்நைட் ப்ளூ மற்றும் பான்டோன் கலர்களில் இந்த மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த புதிய மோட்டோ ஸ்மார்டபோனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

50எம்பி கேமரா.. இந்தியாவுக்கு வரும் புதிய மோட்டோ போன்.. எந்த மாடல்?

மோட்டோ ஜி84 5ஜி அம்சங்கள் (moto g84 5G specifications): ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் (Octa Core Snapdragon 695 8nm) சிப்செட் வசதியைக் கொண்டு இந்த மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சக்திவாய்ந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும். அதேபோல் அட்ரினோ 691எல் ஜிபியு ஆதரவும் (Adreno 619L GPU)இந்த போனில் உள்ளது.

6.55-இன்ச் ஃபுல் எச்படி பிளஸ் 10-பிட் பிஒல்இடி ( 10-bit pOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி84 5ஜி. மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் ( 1300 nits brightness), 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (360Hz touch sampling rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இந்த போனின் டிஸ்பிளேவில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டு வெளிவரும் இந்த போன்.

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி, 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.

3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோஃபோன்கள் எனப் பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஐபி54 ((IP54) சான்றிதழ் பெற்றுள்ளது இந்த மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன்.

50எம்பி கேமரா.. இந்தியாவுக்கு வரும் புதிய மோட்டோ போன்.. எந்த மாடல்?

30 வாட்ஸ் டர்போ சார்ஜிங் உடன் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த அசத்தலான மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G84 5G smartphone coming to India on September 1: check specifications, price: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X