மூன்று ரியர் கேமராவுடன் களமிறங்கும் மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன்.!
இந்த மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி7 சீரிஸ் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனம் விரைவில் புதிய மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம்
செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெற்றுள்ளது என்றும், பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு
அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் மோட்டோரோலா நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.2-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பினபு 1080 பிக்சல் திர்மானம் மற்றம் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 675:
இந்த மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

சேமிப்பு:
மோட்டோ ஜி8 சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:
இந்த மோட்டோ ஜி8 சாதனத்தின் பின்புறம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, என்றும் அதில் ஒன்று 12எம்பி பிரைமரி கேமரா எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அசத்தலான செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டரி:
மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்படும் என மோட்டோரோலா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு வைஃபை,யுஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மோனோ ஸ்பீக்கர் ஆதரவுடன் மோட்டோ ஜி8 சாதனம்
வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications