Home
Mobile

குறிப்பிட்ட சலுகையுடன் இன்று விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி 8 பவர் லைட்.!

மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் தான் இந்தியச் சந்தையில் தனது மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு இந்தியாவில் மலிவு விலையில் அட்டகாசமான சிறப்பம்சத்துடன் ஜி8 பவர் லைட் என் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

மோட்டோ ஜி 8 பவர் லைட்

அதன்படி மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் இன்று மதியம் 12மணி அளவில்விற்பனைக்கு வருகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 5சதிவிகிதம் கேஷ்பேக் சலுகை கடைக்கும். பின்பு இஎம்ஐ வசதி கூட இந்த சாதனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ட்டோ ஜி 8 பவர் லைட்

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன், 6.5' இன்ச் மேக்ஸ் விஷன் கொண்ட எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் கூடிய
வாட்டர் டிராப் நாட்ச் உடன் வருகிறது. இந்த டிஸ்பிளேயின் காட்சி விகிதம் 20: 9 என்ற அளவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் P35 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

மோட்டோ ஜி 8 பவர் லைட்

புதிய மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போனில் கூடுதல் ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்காக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.
மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரையிலான விரிவாக்க மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன் ட்ரிபிள் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பக்க கேமராவில் ஒரு 16 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவும், 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி 8 பவர் லைட்

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன் முன்பக்கத்தில் 8 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபீ கேமராவும்வழங்கப்பட்டுள்ளது. பிடிஏஎஃப், எல்இடி ஃபிளாஷ், பொக்கே, எச்டிஆர் மற்றும் பியூட்டி மோடு போன்ற கேமரா அம்சங்களையும் சாதனம் ஆதரிக்கிறது.

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 ப

இந்த புதிய மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் சாதனம் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்துடன் ப்ளோட்வேர் மற்றும் மோட்டோ கெஸ்டர் ஆதரவு இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, மோட்டோ ஜி 8 லைட் வாட்டர் ரெப்பலேண்ட் மற்றும் பின்புறமாகப் பொருத்தப்பட்ட கைரேகை
ஸ்கேனரைக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Moto G8 Power Lite Sale Starts Today in India with 5000 mAh Battery: Price, Offers and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X