மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.!
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.8,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் தற்சமயம் அறிவிக்கப்பட்ட விலை உயர்வு மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.9,499-க்கு வாங்க முடியும்.

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன், 6.5' இன்ச் மேக்ஸ் விஷன் கொண்ட எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் கூடியவாட்டர் டிராப் நாட்ச் உடன் வருகிறது. இந்த டிஸ்பிளேயின் காட்சி விகிதம் 20: 9 என்ற அளவை கொண்டுள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, ன்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாகஇருக்கும்.

புதிய மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் கூடுதல் ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்காக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரையிலான விரிவாக்க மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன் ட்ரிபிள் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பக்க கேமராவில் ஒரு 16 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவும், 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன் முன்பக்கத்தில் 8 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபீ கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. பிடிஏஎஃப், எல்இடி ஃபிளாஷ், பொக்கே, எச்டிஆர் மற்றும் பியூட்டி மோடு போன்ற கேமரா அம்சங்களையும் சாதனம் ஆதரிக்கிறது.

இந்த புதிய மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் சாதனம் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்துடன் ப்ளோட்வேர் மற்றும் மோட்டோ கெஸ்டர் ஆதரவு இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, மோட்டோ ஜி 8 லைட் வாட்டர் ரெப்பலேண்ட் மற்றும் பின்புறமாகப் பொருத்தப்பட்ட கைரேகை
ஸ்கேனரைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications