5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் மோட்டோரோலா மோட்டோ ஜி8 பவர் லைட்.!
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் தனது மோட்டோ ஜி8 பவர் லைட் சாதனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த மென்பொருள் வசதி, கேமரா வசதி, பேட்டரி உள்ளிட்ட
பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும்.

மோட்டோ ஜி8 பவர் லைட்
குறிப்பாக மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போனை விட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனில் உள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவடிவமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன் மாடல். மேலும் 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த
ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

16எம்பி பிரைமரி சென்சார்
மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

மோட்டோ ஜி8 பவர் லைட் சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10
மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் அல்லது குவால்காம் ஸ்னாப்டிராகன் 665சிப்செட் இடம்பெறும். பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி8 பவர் லைட்
மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது, மேலும் 10வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது.

4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்


Click it and Unblock the Notifications