Home
Mobile

ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதியுடன் களமிறங்கும் மோட்டோ ஜி8 பவர்

மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்கிறது.

 ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதியுடன் களமிறங்கும் மோட்டோ ஜி8 பவர்

மேலும் இந்நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பிளஸ் எனும் மாடல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மோட்டோரோலோ நிறுவனம் மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது.

அதன்படி இந்நிறுவனம் விரைவில் வெளியிடும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது அமெரிக்க வலைத்தளமான FCC-யின் சான்று பெற்று இருக்கிறது. மேலும் இந்த சாhதன்தின் மாடல் எண் XT2041-1கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

 ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதியுடன் களமிறங்கும் மோட்டோ ஜி8 பவர்

குறிப்பாக இந்த மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன் மாடலின் வடிவமைப்பு மற்றும் வன்பொருள் அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் வெளிவந்த தகவின் அடிப்படையில்; மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதியுடன் களமிறங்கும் மோட்டோ ஜி8 பவர்

வெளியான அறிவிப்பில் மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்றும், பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும சிறந்த பாதுகாப்பு வசதியைன் கொண்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 26வாட் டர்போ சார்ஜிங் வசதி, மற்றும் வைஃபை, ஜிபிஎஸ், வோல்ட்இ உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதியுடன் களமிறங்கும் மோட்டோ ஜி8 பவர்

வெளியான தகவலின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது எனத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் பேக், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் பின்புற கைரேகை சென்சார் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Moto G8 Power Amazon Listing Tips Snapdragon 665 SoC, 5000mAh Battery : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X