இன்று அறிமுகமாகும் மோட்டோ ஜி8 பிளஸ் ஸமார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
மோட்டோரோலா நிறுவனம் இன்று இரவு 8மணி அளவில தனது புதிய பிரேசிலில் அறிமுகம் செய்ய உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு முக்கிய அம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதைப் பற்றி விரிவாக பார்ப்போம் வாங்க.

6.3-இன்ச் முழு எச்டி பிளஸ்
மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2280×1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் இவற்றுள் அடக்கம் என
அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி8 பிளஸ் சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 5எம்பி டெப்த்சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு ரியர் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது எனத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் 25எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், டூயல்சிம்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த சாதனம்
188கிராம் எடை கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன்வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். பின்பு
இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. விலை பற்றிய தகவல் கிடைத்ததும்உடனே அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications