Home
Mobile

வெளுக்குது விற்பனை.. 42 சதவீத ஆஃபரில் 7000mAh பேட்டரி.. 30W டர்போ சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் மோட்டோ ஜி77 பவர் (Moto g77 Power) ஸ்மார்ட்போனின் விற்பனை தள்ளுபடியுடன் தொடங்கி இருக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட் மட்டுமல்லாமல், 7000mAh பேட்டரி, 30W சார்ஜிங் மற்றும் 50 எம்பி கேமராவுடன் உள்ளிட்ட பீச்சர்களுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 42 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்ட ரூ.25,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.23,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். ஈஎம்ஐ சலுகை மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது.

வெளுக்குது விற்பனை.. 42 சதவீத ஆஃபரில் 7000mAh பேட்டரி.. 30W சார்ஜிங்!

மோட்டோ ஜி77 பவர் அம்சங்கள் (Moto g77 Power Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாக இந்த மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. ஆகவே, ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) அப்டேட் கிடைக்கும். சோனி லைட்டியா 600 (Sony LYTIA 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை இந்த மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.

மேலும், 2-இன்-1 லைட் சென்சாரும் கிடைக்கிறது. 2K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. 32 எம்பி செல்பீ கேமராவுடன் இந்த மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இதிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 30W டர்போபவர் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. 8.89 எம்எம் தடிமன் உள்ளது.

215 கிராம் எடை கொண்ட மாடலாக இந்த மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் இருக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொடுத்துள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மட்டுமல்லாமல், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) வருகின்றன.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் இருக்கிறது. எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. இம்பெனிட்ரேபிள் (Impenetrable), நாட்டிகல் ப்ளூ (Nautical Blue) மற்றும் ஃபியூஷியா ரெட் (Fuchsia Red) கலர்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Moto g77 Power With 50MP Camera Available At Rs 2000 Discount in Flipkart Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X