நாளை இந்தியாவில் அறிமுகமாகும் புது Moto 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
மோட்டோரோலா (Motorola) நிறுவனம் நாளை (ஜூலை 8) மோட்டோ ஜி77 பவர் (moto g77 Power) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக நாளை மதியம் 12 மணி அளவில் இந்த புதிய மோட்டோ போன் அறிமுகமாகும். அதுவும் பிளிப்கார்ட் தளத்தில் இந்த புதிய போன் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் வெளியான மோட்டோ ஜி77 பவர் போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோ ஜி77 பவர் அம்சங்கள் (moto g77 Power Specifications): மீடியாடெக் டிமென்சிட்டி 6400 (MediaTek Dimensity 6400) சிப்செட்
உடன் மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.
இந்த புதிய மோட்டோ போனின் பின்புறம் 50எம்பி Sony LYTIA 600 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமராக்கள் உள்ளன. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஸ்மார்ட் கனெக்ட் ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளது.
டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) ஆதரவு கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் (3.5mm headphone jack) ஆதரவும் இதில் உள்ளது.
7000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

டீப் ப்ளூ (Deep Blue),கிரே மற்றும் பிளாக் நிறங்களில் மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த போன் வெளிவரும்.
குறிப்பாக மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளியாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications