ஆகஸ்ட் 8 வரை வெயிட் பண்ணுங்க.. ஆஃபரில் Moto 5ஜி போன்.. 7000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி பிளிப்கார்ட் ப்ரீடம் சேல் 2026 (Flipkart Freedom Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்.
அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோ ஜி77 பவர் (moto g77 Power) ஸ்மார்ட்போனும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் தற்போது ரூ.26,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற உள்ள ப்ரீடம் சேல் 2026 எனும் சிறப்பு விற்பனையில் இந்த போன் ரூ.21,999 விலையில் வாங்க கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
மோட்டோ ஜி77 பவர் அம்சங்கள்: சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த மோட்டோ போனில் உள்ளது.
அதேபோல் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 × 1080 பிக்சல்ஸ், 1050 நிட்ஸ் HBM பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.
அதுவும் ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
குறிப்பாக 50எம்பி Sony LYTIA 600 மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2-இன்-1 லைட் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது புதிய மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) ஆதரவு கொண்டுள்ளது. அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன்ன் வெளிவந்துள்ளது மோட்டோ ஜி77 பவர் மாடல்.

3.5எம்எம் ஹெட்போன் ஜாக் (3.5mm headphone jack), எப்எம் ரேடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones), டால்பி விஷன் (Dolby Vision) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் உள்ளன. குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் இந்த புதிய மோட்டோ போன் வெளியாகி உள்ளது. மேலும் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் 7000எம்ஏஎச் பேட்டரி உடன் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W டர்போசார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 5 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications