அறிமுகமானது புது மோட்டோ 5ஜி போன்.. 7000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி77 பவர் (moto g77 Power) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 7000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. இப்போது இந்த புதிய மோட்டோ போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
மோட்டோ ஜி77 பவர் அம்சங்கள்: 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 × 1080 பிக்சல்ஸ், 1050 நிட்ஸ் HBM பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த மோட்டோ போனில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
50எம்பி Sony LYTIA 600 மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2-இன்-1 லைட் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது புதிய மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன். அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன்ன் வெளிவந்துள்ளது மோட்டோ ஜி77 பவர் மாடல்.
3.5எம்எம் ஹெட்போன் ஜாக் (3.5mm headphone jack), எப்எம் ரேடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones), டால்பி விஷன் (Dolby Vision) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் உள்ளன. குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் இந்த புதிய மோட்டோ போன் வெளியாகி உள்ளது. மேலும் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

7000எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W டர்போசார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 5 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜ7 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,999-ஆக உள்ளது. ஜூலை 13 அன்று இந்தியாவில் பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா இந்தியா ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வர உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.


Click it and Unblock the Notifications