Home
Mobile

இதுக்கு தானே இந்தியாவே வெயிட்டிங்.. Motorola மிரட்டலடி.. 7000mAh பேட்டரி உடன் புது 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா (Motorola) நிறுவனம் வருகிற ஜூலை 8 அன்று இந்தியாவில் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. அது மோட்டோ ஜி77 பவர் (Moto G77 Power) மாடல் ஆகும். அறிமுகத்திற்கு முன்னதாகவே, மோட்டோரோலா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக பட்டியலிட்டு, அதன் முழு அம்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. ஆக விலை மட்டும் தான் இன்னும் (ஜூலை 8-ல்) அறிவிக்கப்பட வேண்டும் - இது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு ஆல்-ரவுண்டருக்கு தானே வெயிட்டிங்: நேற்று வரையிலாக இது வெறுமனே பேட்டரி திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் மோட்டோரோலா வெளிப்படுத்திய அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போன் தரமான டிஸ்பிளே, நல்ல கேமராக்கள் மற்றும் சிறப்பான செயல்திறன் ஆகியவற்றையும் வழங்குகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

Motorola மிரட்டலடி.. 7000mAh பேட்டரி உடன் புது 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோ ஜி77 பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, மோட்டோ ஜி77 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.72-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது FHD+ ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஹை ப்ரைட்னஸ் மோட்-ல் (High Brightness Mode) 1050 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

இதன் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) மூலம் பாதுகாக்கப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் IP64 ரேட்டிங் கொண்ட நீர்-எதிர்ப்பு (water resistant) வடிவமைப்பு மற்றும் MIL-STD-810H நீடித்து உழைப்பதற்கான சான்றிதழ் ஆகியவற்றையும் கொண்டு உள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இது மீடியாடெக் டிமென்சிட்டி 6400 (MediaTek Dimensity 6400) சிப்செட் மூலம் இயக்கப்படும். இது 8ஜிபி வரையிலான LPDDR4X ரேம் மற்றும் 128ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜையும் கொண்டிருக்கும். மேலும் ரேம் பூஸ்ட் (RAM Boost) வசதி மூலம் விர்ச்சுவல் ஆக (virtually) இந்த ஸ்மார்ட்போனின் ரேம் திறனை அதிகரிக்க முடியும், அத்துடன் மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு மூலம் ஸ்டோரேஜையும் 1TB வரை உயர்த்திக்கொள்ளலாம்.

மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போனின் மிக முக்கிய சிறப்பம்சம் அதன் 7,000mAh பேட்டரி ஆகும். இது 30W டர்போபவர் (TurboPower) சார்ஜிங் மற்றும் 6W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் (wired reverse charging) ஆகியவற்றை ஆதரிக்கிறது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 59 மணிநேரம் வரை பயன்படுத்தலாம் என்று மோட்டோரோலா கூறுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் OIS வசதியுடன் கூடிய 50 மெகாபிக்சல் Sony LYTIA 600 ப்ரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா உள்ளன. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. முன் மற்றும் பின் கேமராக்கள் இரண்டும் 2K ரெசல்யூஷன் வரையிலான வீடியோ பதிவை ஆதரிக்கின்றன.

ஓஎஸ்-ஐ பொறுத்தவரை மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 உடன் வருகிறது. இது ஒரு மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கலைபெற்றும் என்று மோட்டோரோலா உறுதியளித்துள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) வசதியுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், ப்ளூடூத் 5.4 மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஆகியவைகள் இதன் பிற முக்கிய அம்சங்களாகும்.

என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? கிட்டத்தட்ட எல்லா அம்சங்களும் வெளிப்படுத்தப்பட்டாலும் கூட மோட்டோ ஜி77 பவர் ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் இது Pantone Impenetrable, Pantone Nautical Blue, Pantone Fuchsia Red மற்றும் Pantone Laurel Green ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்பது அதிகாரப்பூர்வ பட்டியல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை இது ரூ.21,999 என்கிற ஆரம்ப விலைக்கு, ஜூலை 8 அன்று அறிமுகம் செய்யப்படலாம்.

Best Mobiles in India

English summary
Moto G77 Power Full Specifications Officially Revealed Before India Launch on July 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X