ஜூலை 8 மொத்த சாம்ராஜ்யம் மிரளும்.. 7000mAh பேட்டரி.. SONY கேமரா.. 30W டர்போசார்ஜிங்.. எந்த மாடல்?
மோட்டோரோலா (Motorola) நிறுவனம் ஆனது மோட்டோ ஜி77 பவர் (moto g77 Power) ஸ்மார்ட்போனை வருகிற ஜூலை 8ஆம் தேதி இந்தியா மார்கெட்டில் வெளியிட இருக்கிறது. இந்த வெளியீட்டுக்கு முன்பே முழு பீச்சர்களும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. ரேம் மற்றும் மெமரியை வைத்து பார்த்தால், பட்ஜெட் மாடலாக இருப்பது உறுதியாகிறது.
பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டிருப்பதால், பட்ஜெட்டில் கிடைக்க இருப்பது உறுதியாகும். ரூ.15,000 பட்ஜெட்டில் ஆரம்ப விலை இருக்கலாம். இருப்பினும், முழு பீச்சர்களும் பட்ஜெட்டுக்கு ஏற்ப மட்டுமே இருக்கும் என்று சொல்ல முடியாது. பட்ஜெட்டுக்கு மேலயும் இருக்கிறது.

மோட்டோ ஜி77 பவர் அம்சங்கள் (moto g77 Power Specifications): 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல் எச்டிபிளஸ் (Full HD+) ரெசொலூஷன், 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 120Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், வாட்டர் டச் (Water Touch), ஹை பிரைட்னஸ் மோட் (High Brightness Mode) மற்றும் டிஸ்பிளே கலர் பூஸ்ட் (Display Color Boost) கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. IP64 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water Resistant) மற்றும் MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. 12 ஜிபி ரேம் பூஸ்ட் கிடைக்கிறது. சோனி லைடியா 600 (Sony LYTIA 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) மற்றும் பிடிஏஎப் போகஸ் (PDAF Focus) கிடைக்கிறது.
2K ரெக்கார்டிங் வருகிறது. 8x ஹை-ரெஸ் டிஜிட்டல் ஜூம், எலக்ட்ரானிக் வீடியோ ஸ்டெபிலைசேஷன் (EIS) கிடைக்கிறது. பிக்சடு போகஸ் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + ஆம்பியன் லைட் சென்சார் (Ambient Light Sensor) + ஃபிளிக்கர் டிடெக்டர் (Flicker Detector) கிடைக்கிறது. குவாட் பிக்சல் டெக்னாலஜியுடன் 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.
ஷாட் ஆப்டிமைசேஷன் (Shot Optimization), ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் (Auto Smile Capture) உள்ளது. நைட் விஷன் மோட் (Night Vision Mode), போர்ட்ராய்டு (Portrait), பனோரமா (Panorama) போன்ற வழக்கமான பீச்சர்களும் உள்ளன. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளது.
மேலும், 3.5 எம்எம் ஹெட்செட் ஜாக் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. 1 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கிறது.
3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் உள்ளது. சைடு ஃபிங்கர்பிரிண்ட் ரீடர் (Side Fingerprint Reader) கொடுக்கப்பட்டு உள்ளது. 7000mAh பேட்டரி மற்றும் 30W டர்போபவர் சார்ஜிங் கிடைக்கிறது. 6W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் கிடைப்பதால், பட்ஜெட் விலையில் கிடைக்கும் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது.
பான்டோன் இம்பெனிட்ரேபிள் (PANTONE Impenetrable), பான்டோன் நாட்டிகல் ப்ளூ (PANTONE Nautical Blue), பான்டோன் ஃபியூஷியா ரெட் (PANTONE Fuchsia Red), பான்டோன் லாரல் கிரீன் (PANTONE Laurel Green) ஆகிய 4 கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. வீதன் லெதர் பேனல் டிசைனும் கொண்ட மாடலாக இந்த மோட்டோ இருக்கிறது.


Click it and Unblock the Notifications