போட்டான் பாரு Moto.. மட்ட ரேட்ல 108MP கேமரா.. 5200mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 30W சார்ஜிங்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களான மோட்டோ ஜி77 (Moto G77) மற்றும் மோட்டோ ஜி67 (Moto G67) மாடல்களின் முழு பீச்சர்கள் கசிந்துவிட்டன. 108 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் போன்ற பீச்சர்களில் முந்தைய மாடல்களை தூக்கி சாப்பிடும் இருக்கின்றன. இந்த மோட்டோ ஸ்மார்ட்போன்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் மோட்டோ ஜி57 பவர் (Moto G57 Power) மற்றும் மோட்டோ ஜி67 பவர் (Moto G67 Power) ஆகிய மாடல்கள் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் அடுத்து வெளியாக இருக்கும் மாடல்களுக்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இப்போது, மோட்டோ ஜி77 மற்றும் மோட்டோ ஜி67 ஸ்மார்ட்போன்களின் பீச்சர்கள் கசிந்துள்ளது.

பட்ஜெட் விலை மாடல்களாக இவை அறிமுகமாக இருக்கின்றன. முதலில் குளோபல் மார்கெட்டில் வெளியாகும். பிறகு இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் வெளியாக இருக்கிறது. இருப்பினும், குளோபல் மற்றும் இந்திய வெர்ஷன்களில் பெரிதாக மாற்றங்கள் இருக்காது. ஆகவே, இந்த கசிந்த பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் வெளியானால், இதே பீச்சர்களே கிடைக்கும்.
மோட்டோ ஜி67 அம்சங்கள் (Moto G67 Specifications): 6.8 இன்ச் எக்ஸ்ட்ரீம் அமோலெட் (Extreme AMOLED) டிஸ்பிளேவை இந்த மோட்டோ ஜி67 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 1.5K ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பை கொடுக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைக்க உள்ளது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைத்துள்ளது. 2 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.
சோனி எல்ஒய்டி600 (Sony LYT600) சென்சார் கொடுக்கப்பட உள்ளது. செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்க உள்ளது. 30W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5200mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. MIL-STD-810H சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி உள்ளது.
மோட்டோ ஜி77 அம்சங்கள் (Moto G77 Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட் கிடைத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுகாப்பு கொண்ட 6.8 இன்ச் எக்ஸ்ட்ரீம் அமோலெட் டிஸ்பிளே கிடைத்துள்ளது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 5000 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.
32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 108 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது. டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீச்சர்களை கொடுக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஓரிரு வாரங்களில் வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








