மிரட்டிவிட்டாப்ல.. ரூ.27,000 பட்ஜெட்ல SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. 30W சார்ஜிங்.. 1TB மெமரி.. எந்த மாடல்?
மோட்டோ பிரியர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படி மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 6என்எம் எஸ்ஓசி (Qualcomm Snapdragon 6 Gen 3 6nm SoC) சிப்செட் கொண்ட முதல் மாடலாக மோட்டோ ஜி75 5ஜி (Moto G75 5G) போன் களமிறங்கி இருக்கிறது. இதுபோக சோனி எல்ஒய்டி சென்சார் கேமரா, 15W வயர்லெஸ் சார்ஜிங், 30W டர்போ சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை பேக் செய்துள்ளது.
இந்த மோட்டோவின் டிசைனை பார்க்கையில், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியுடன் MIL-STD 810H சர்டிபிகேஷன் கொண்டிருக்கிறது. டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் வருகிறது. வேகன் லெதர் பேனல் மற்றும் மேட் பினிஷிங் பேனல் கொண்ட பேக் டிசைன் கொண்டிருக்கிறது. பிரீமியம் லுக் எதிர்பார்க்கலாம்.

மோட்டோ ஜி75 5ஜி அம்சங்கள் (Moto G75 5G Specifications): இந்த மோட்டோ போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 6என்எம் எஸ்ஓசி சிப்செட் மற்றும் மிட்-ரேஞ்ச் கேமிங் பிரியர்கள் விரும்பும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த லேட்டஸ்ட் சிப்செட் கொண்ட முதல் மாடலாக மோட்டோ ஜி75 5ஜி போன் இருக்கிறது.
மேலும், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு மை யுஎக்ஸ் (My UX) வருகிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி ரேம் பூஸ்ட் (RAM Boost) வருகிறது. ஆகவே 16 ஜிபி ரேம் + 256 மெமரி மெமரி கொண்ட வேரியண்ட் மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது. ஹைபிரிட் நானோ சிம் (Hybrid Dual SIM) சிலாட் உள்ளது.
முந்தைய மாடல்களை போல கர்வ்ட் டிசைன் மற்றும் பிஓஎல்இடி டிஸ்பிளேவை இந்த மாடலில் எதிர்பார்க்க முடியாது. 6.78 இன்ச் (2388 × 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இருப்பினும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
மேலும், 387 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது. வாட்டர் டச் (Water Touch) மற்றும் டிஸ்பிளே கலர் பூஸ்ட் (Display Colour Boost) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + ஃபிளிக்கர் சென்சார் (Flicker Sensor) கொண்ட பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.
மெயின் கேமராவில் சோனி எல்ஒடி 600 (Sony LYT 600) சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilisation) மற்றும் பிடிஏஎப் (PDAF) போகஸ் சப்போர்ட் வருகிறது. அல்ட்ரா வைடு கேமராவில் மேக்ரோ விஷன் (Macro Vision) மற்றும் ஆட்டோபோகஸ் (AutoFocus) சப்போர்ட் உள்ளது. இந்த மோட்டோ போனில் 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
30W டர்போ சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் விலை ரூ.27,915ஆக இருக்கிறது. குளோபல் வேரியண்ட் வெளியாகி இருக்கிறது. முதலில் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் விரைவில் வெளியாகும். சார்கோல் கிரே (Charcoal Grey), அக்வா ப்ளூ (Aqua Blue) சக்கலன்ட் கிரீன் (Succulent Green) கலர்கள் உள்ளது.


Click it and Unblock the Notifications








