அடுத்த Moto 5ஜி போன் ரெடி.. சோனி கேமரா.. டால்பி அட்மாஸ்.. ஐபி68 ரேட்டிங்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் அடுத்து மோட்டோ ஜி75 5ஜி (Moto G75 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது தற்போது இந்த போனின் டிசைன், கலர் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. எனவே கூடிய விரைவில் இந்த புதிய மோட்டோ ஜி75 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்ச் ஹோல் டிஸ்பிளே(Punch Hole Display), டூயல் ரியர் கேமரா, டால்பி அட்மாஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி75 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மோட்டோ ஜி75 5ஜி அம்சங்கள் (Moto G75 5G Specifications): 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் மோட்டோ ஜி75 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி எல்ஒய்டி600 (Sony LYT600) பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய மோட்டோ ஜி75 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த புதிய போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
டால்பி அட்மாஸ்(Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் உடன் மோட்டோ ஜி75 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியுடன் இந்த புதிய மோட்டோ ஜி75 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மீடியாடெக் சிப்செட் விட மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட். அதேபோல் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (IP68 dust and water-resistant rating) கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ 5ஜி போன்.
குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) ஆதரவுடன் மோட்டோ ஜி75 5ஜி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போனின் வலது பக்கத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் உள்ளன. மேலும் கருப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

5000mAh பேட்டரி உடன் மோட்டோ ஜி75 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த போன் வெளிவரும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்தியாவில் மோட்டோ ஜி75 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000 விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.
photo credit: 91mobiles.com


Click it and Unblock the Notifications








