Home
Mobile

புதிய 5G போனை அறிமுகம் செய்து மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த Motorola.!

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் புதிய மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இந்த போன் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி73 5ஜி அம்சங்கள்

மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 1080 X 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

புதிய 5G போனை அறிமுகம் செய்து மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த Moto.!

மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 930 சிப்செட் உடன் IMG BXM-8-256 GPU ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த புத்தம் புதிய மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய 5G போனை அறிமுகம் செய்து மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த Moto.!

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 30 வாட்ஸ் டர்போ சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இந்த போன் வெளிவந்துள்ளது.

புதிய 5G போனை அறிமுகம் செய்து மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த Moto.!

மோட்டோ ஜி73 5ஜி விலை

இந்த மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போனின் அனைத்து அம்சங்களும் மிகவும் அருமையாகத் தான் உள்ளது. ஆனால் இந்த போன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ ஜி73 5ஜி போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. வரும் மார்ச் 16-ம் தேதி இந்த போன் விற்பனைக்கு வருகிறது. அதேபோல் அறிமுக சலுகையாக இந்த போனை ரூ.16,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் ரூ.13,000-க்கு கீழ் வெளிவந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G73 5G With 50-Megapixel Camera Launched in India: Price, Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X