ரெடியா இருங்க.. பட்ஜெட் விலை Moto 5ஜி போனின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.!
கடந்த மாதம் சர்வதேசச் சந்தையில் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த போன் இதுவரை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் வரும் மார்ச் 10-ம் தேதி இந்த மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த புதிய மோட்டோ ஜி73 5ஜி போன் ஆனது மார்ச் 10-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த மோட்டோ ஜி73 5ஜி போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி73 5ஜி அம்சங்கள்
மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 1080 X 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 930 சிப்செட் உடன் IMG BXM-8-256 GPU ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போன்
சிறந்த செயல்திறன் வழங்கும்.
டூயல் ரியர் கேமரா
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 30 வாட்ஸ் டர்போ சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன்.

கனெக்டிவிட்டி
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் குறைவான எடை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் இந்தியச்
சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








