Home
Mobile

108MP கேமராவுடன் மோட்டோ ஜி72 இந்தியாவில் அறிமுகம்: வாங்கத் தூண்டும் விலை.!

இந்தியாவில் Moto G72 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் தனித்துவமான வடிவமைப்பு, அட்டகாசமான கேமரா, கேமிங் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனின் விலை

மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனின் விலை

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனின விலை ரூ.18,999-ஆக உள்ளது. ஆனால் இந்த போனின் அறிமுக சலுகையாக ரூ.14,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சலுகை எப்படி கிடைக்கும் என்றால், எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாக ரூ.3,000 மற்றும் தேர்வு செய்யப்பட்டவங்கி கார்டுகளை பயன்படுத்தி இதை வாங்கும் போது ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது.

அறிமுக சலுகை

மேலும் இந்த அறிமுக சலுகை சில நாட்கள் மட்டுமே இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Meteorite Gray மற்றும் Polar Blue நிறங்களில் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் வரும் அக்டோபர் 12 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் pOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 576 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் மாடல்.

ஹீலியோ ஜி99 சிப்செட் வசதி

ஹீலியோ ஜி99 சிப்செட் வசதி

மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் உள்ள ஹீலியோ ஜி99 சிப்செட் கேமிங் வசதிகளுக்கு மிக அருமையாகப் பயன்படும்.

108எம்பி மெயின் கேமரா

108எம்பி மெயின் கேமரா

மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன் ஆனது 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

128ஜிபி ஸ்டோரேஜ்

128ஜிபி ஸ்டோரேஜ்

இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் பல சென்சார் வசதியை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

புதிய மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 30 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன்.

 எடை 166 கிராம்

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த போனின் எடை 166 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Moto G72 With 108-Megapixel Triple Cameras Launched in India: Specifications, Price and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X