Home
Mobile

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான மோட்டோ ஜி71 ஸ்மார்ட்போன்.! முழு விவரம்.!

சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி71 ஸ்மார்ட்போன் மாடல் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மோட்டோரோலா நிறுவனம் முதலில் மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனம் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனின்

இப்போது மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது
6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு2400 x 1080 பிக்சல் தீர்மானம்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பானஅம்சங்களை கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம்

மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் MYUI சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸமார்ட்போன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மோட்டோ ஜி71 5ஜி ஸ்

மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டோ ஜி71 5ஜி

இந்த மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா
என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி
கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனில் 5000

புதிய மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்,

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளைகொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

 மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனின் விலை RMB 1,699 (இந்திய மதிப்பில் ரூ.18,900)ஆக உள்ளது. அதேபோல் நெபுலா கிரீன் அல்லது கிளேசியர் ப்ளூ நிறங்களில் இந்த புதிய மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Moto G71 smartphone to be launched in India next week: Full details!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X