ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 50எம்பி கேமராவுடன் மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

|

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி 19-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி71 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமிர கொண்ட மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. பின்புஆர்க்டிக் புளூ மற்றும் நெப்டியூன் கிரீன் நிறங்களில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.200-க்கு கீழ் இவ்வளவு திட்டம் இருக்கா?- ஏர்டெல், விஐ, ஜியோ பயனர்களுக்கான சிறந்த ரீசார்ஜ் திட்டம் இதோ!ரூ.200-க்கு கீழ் இவ்வளவு திட்டம் இருக்கா?- ஏர்டெல், விஐ, ஜியோ பயனர்களுக்கான சிறந்த ரீசார்ஜ் திட்டம் இதோ!

மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது

மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு2400 x 1080 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், உள்ளிட்ட பல்வேறு சிறப்பானஅம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனம் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஜியோ புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்: வருடம் முழுவதும் தினசரி 2.5 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு- விலை இதோ!ஜியோ புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்: வருடம் முழுவதும் தினசரி 2.5 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு- விலை இதோ!

மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-

மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸமார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

என்னையா இப்படி கிளம்பிட்டீங்க: வீட்டுக்கு அன்பளிப்பாக வரும் USB- மொத்தமும் மால்வேர் வைரஸ்: தொட்டா கெட்டோம்!என்னையா இப்படி கிளம்பிட்டீங்க: வீட்டுக்கு அன்பளிப்பாக வரும் USB- மொத்தமும் மால்வேர் வைரஸ்: தொட்டா கெட்டோம்!

மோட்டோ ஜி71 5ஜி

மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.17,000 தள்ளுபடி.,இனி கெத்தா யூஸ் பண்ணலாம்- சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட்3, இசட் ஃபிளிப்3 வாங்க சரியான நேரம்!ரூ.17,000 தள்ளுபடி.,இனி கெத்தா யூஸ் பண்ணலாம்- சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட்3, இசட் ஃபிளிப்3 வாங்க சரியான நேரம்!

மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனின்

இந்த மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி
கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

இலவசம், இலவசம்: எஸ்பிஐ பயனர்களுக்கு ஒரு நற்செய்தி- இனி ரூ.5 லட்சம் வரை பணப் பரிவர்த்தனைக்கு ஜீரோ கட்டணம்!இலவசம், இலவசம்: எஸ்பிஐ பயனர்களுக்கு ஒரு நற்செய்தி- இனி ரூ.5 லட்சம் வரை பணப் பரிவர்த்தனைக்கு ஜீரோ கட்டணம்!

 ஸ்மார்ட்போனில் 5000

புதிய மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி: இந்திய அறிமுக தேதி, விலை இதுதான்- சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி: இந்திய அறிமுக தேதி, விலை இதுதான்- சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபி

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளைகொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Moto G71 5G With Triple Rear Cameras Launched in India: Specs, Features and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X