Home
Mobile

இந்தியா: 6.24-இன்ச் டிஸ்பிளேவுடன் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.16,999-விலையில் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

இந்தியா: 6.24-இன்ச் டிஸ்பிளேவுடன் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

குறிப்பாக பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே

டிஸ்பிளே

மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.24-இன்ச் எப்எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2270 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சிப்செட்:

சிப்செட்:

மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் 1.8ஜிகாஹெர்ட் ஸ்னாப்டிராகன் 632 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்ட்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மோட்டோ ஜி7 சாதனத்தின் பின்புறம் கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

மோட்டோ ஜி7 சாதனத்தில் 12எம்பி பிரைமரி சென்சார்+ 5எம்பி செகன்டரி சென்சார் இடம்பெற்றுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா,
எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளது.

பேட்டரி

பேட்டரி

மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Moto G7 with 6.24-inch full-HD+ display, Snapdragon 632 launched in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X