Home
Mobile

புதிய மாறுபாடுகளில் அறிமுகமாகும் மோட்டோ ஜி7 பிளஸ்.!

மோட்டோ ஜி7 பிளஸ் சாதனத்தில் டூயல் ரியர் கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சம் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

மோட்டோரோலா நிறுவனம் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியுடன், விவா சிவப்பு நிறத்தில் மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் விரைவில் இந்தியாவில் விவா சிவப்பு நிறத்தில் மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மாறுபாடுகளில் அறிமுகமாகும் மோட்டோ ஜி7 பிளஸ்.!

மேலும் மோட்டோ ஜி7 பிளஸ் சாதனத்தில் டூயல் ரியர் கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சம் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இப்போது அந்த சாதனத்தின் சில குறிப்புகளைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.24-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சிப்செட்:

சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:

சேமிப்பு:

மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்க்கது.

கேமரா:

கேமரா:

மோட்டோ ஜி7 பிளஸ் சாதனத்தின் பின்புறம் 16எம்பி + 5எம்பி கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 12எம்பி செல்பீ கேமரா, 1080பிக்சல் வீடியோ பதிவு ஆதரவு, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த
ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 3000எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


இந்திய விலைமதிப்பில்

4ஜிபி ரேம் கொண்ட மோட்டோ ஜி7 பிளஸ் சாதனத்தின் விலை ரூ.21,000-ஆக உள்ளது.

6ஜிபி ரேம் கொண்ட மோட்டோ ஜி7 பிளஸ் சாதனத்தின் விலை ரூ.24,000-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Moto G7 Plus officially launched in Viva Red Color with 128 GB storage: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X