Home
Mobile

மார்ச் 25: இந்தியாவில் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஆண்ட்ராய்ட்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் மாடல் வரும் மார்ச் 25-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

மார்ச் 25: இந்தியாவில் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மோட்டோரோலா நிறுவனம் எப்போதும் தரம் வாய்ந்த ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் உலகம் முழுவதும் அதிக வரவேறப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவருகிறது.

மோட்டோ ஜி7 :

மோட்டோ ஜி7 :

மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.24-இன்ச் எப்எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2270 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சிப்செட்:

சிப்செட்:

மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் 1.8ஜிகாஹெர்ட் ஸ்னாப்டிராகன் 632 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்ட்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மோட்டோ ஜி7 சாதனத்தின் பின்புறம் கைரேகை ஸ்கேனர்
இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

மோட்டோ ஜி7 சாதனத்தில் 12எம்பி பிரைமரி சென்சார்+ 5எம்பி செகன்டரி சென்சார் இடம்பெற்றுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ
கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளது.

 பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக ரூ.20000-க்குள் இந்த சாதனம் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Moto G7 India launch pegged for March 25: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X