மோட்டோரோலா களமிறங்கும் புதிய 5ஜி போன்.. டைமன்சிட்டி சிப்செட்.. ஆண்ட்ராய்டு 16 ஒஎஸ்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி67எஸ் பவர் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கம்மி பட்ஜெட்டில் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த மோட்டோ ஜி67எஸ் போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோ ஜி67எஸ் பவர் அம்சங்கள் (Motorola Edge 70 Neo Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (MediaTek Dimensity 6400) சிப்செட் உடன் மோட்டோ ஜி67எஸ் பவர் ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

6.3-இன்ச் டிஸ்பிளே உடன் மோட்டோ ஜி67எஸ் பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
50எம்பி ரியர் கேமரா அமைப்புடன் மோட்டோ ஜி67எஸ் பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த போனின் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் மோட்டோ ஜி67எஸ் பவர் போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) வசதியுடன் மோட்டோ ஜி67எஸ் பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த போனில் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கிடைக்கிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த மோட்டோ ஜி67எஸ் பவர் போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
மோட்டோ ஜி67எஸ் பவர் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
6000எம்ஏஎச் பேட்டரி அல்லது 7000எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ ஜி67எஸ் பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழஙகும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோ ஜி67எஸ் பவர் போனில் உள்ளன. தற்போது ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.20,000-க்கு கீழ் இந்த புதிய மோட்டோ ஜி67எஸ் பவர் போன் அறிமுகாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications
