அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. 7000mAh பேட்டரி.. நவ.5-ல் இந்தியாவுக்கு வரும் புது Moto போன்..
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி67 பவர் (Moto G67 Power) ஸ்மார்ட்போனை வரும் நவம்பர் 5-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் தற்போது இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
மோட்டோ ஜி67 பவர் அம்சங்கள் (Moto G67 Power Specifications): தரமான ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 chipset) உடன் இந்த மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

அதேபோல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய மோட்டோ ஜி67 பவர் போன் வெளிவரும். மேலும் இந்த போனின் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.
ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போன் இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ் பெற்றுள்ளது.
50எம்பி சோனி எல்ஒய்டி-600 சென்சார் (Sony LYT-600 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. அதுவும் இந்த போனில் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் ( dust and splash resistance) ஆதரவு கொண்டுள்ளது மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

7000mAh பேட்டரி உடன் மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த சாதனத்தில் உள்ளன.
மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.20,000 கீழ் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications






