இன்பதிர்ச்சி கொடுத்த மோட்டோரோலா.. ஆண்ட்ராய்டு 16 OS அப்டேட்.. எந்த ஸ்மார்ட்போனுக்கு தெரியுமா?
மோட்டோரோலா நிறுவனம் தனது போன்களுக்கு அவ்வப்போது ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு மோட்டோ போனுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் வழங்க தொடங்கி உள்ளது மோட்டோரோலா நிறுவனம். அதாவது மோட்டோ ஜி7 பவர் (Moto G67 Power) போனுக்கு தான் ஆண்ட்ராய்டு 16 OS அப்டேட் கிடைக்கத் தொடங்கி உள்ளது.
குறிப்பாக மோட்டோ ஜி7 பவர் போனுக்கு வழங்கப்படும் ஆண்ட்ராய்டு 16 அப்டேட் ஆனது W1VN36H.60-30 ஃபார்ம்வேர் பதிப்போடு வருகிறது. மேலும் இதன் டவுன்லோடு சைஸ் 1.33ஜிபி ஆகும். மோட்டோரோலா ஜி7 பவர் போனுக்கு வழங்கப்படும் இந்த புதிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் ஆனது மேம்பட்ட பல புதிய அம்சங்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளையும் வழங்கும். இப்போது மோட்டோரோலா ஜி7 பவர் போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோ ஜி67 பவர் 5ஜி அம்சங்கள் (Moto G67 Power 5G Specifications): ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 chipset) உடன் இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் உள்ளது.
6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய மோட்டோ ஜி67 பவர் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 x 1080பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.
அதேபோல் 50எம்பி சோனி எல்ஒய்டி-600 சென்சார் (Sony LYT-600 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + two-in-one Flicker கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் இந்த புதிய மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. பின்பு இந்த போனில் 4K வீடியோ பதிவு செய்ய முடியும்.
அதுவும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ்(Dolby Atmos), டூயல் மைக்ரோ போன்கள் உள்ளிட் பல சிறப்பான வசதிகள் இந்த அசத்தலான மோட்டோ ஜி67 பவர் 5ஜி போனில் உள்ளன.
குறிப்பாக IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) ராணுவ தரத்திலான குவாலிட்டியும் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
பான்டோன் சிலன்ட்ரோ (PANTONE Cilantro), பான்டோன் ப்ளூ குராக்கோ (PANTONE Blue Curacao), பான்டோன் பாராசூட் பர்பிள் (PANTONE Parachute Purple) நிறங்களில் இந்த போனை வாங்கலாம். தற்போது இந்த போன் ரூ.16,999 விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








