பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. 7000mAh பேட்டரி, SONY கேமரா.. வந்தது Moto போனுக்கு செம்ம டிமாண்ட்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பிரீமியம் பீச்சர்களை பட்ஜெட் விலை மாடல்களில் கொடுக்கும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் மோட்டோ தனி இடம் பிடித்துவிட்டது. இதில் பவர் சீரிஸ் மாடல்கள் பீச்சர்கள் மட்டுமல்லாமல், பெரிய பேட்டரி கொண்ட மாடலாக களமிறங்கி வருகின்றன. இந்த வரிசையில் வெளியான மோட்டோ ஜி67 பவர் 5ஜி (moto g67 power 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடியில் கிடைக்கிறது.
பிளிப்கார்ட் தளத்தில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டுக்கு 13 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.26,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.25,999 விலையில் இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமே கொடுக்கிறது. 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, இதை பார்த்து கொள்ள வேண்டும். 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்துள்ளது. பான் டோன் சிலான்ட்ரோ, பான்டோன் குராக்கோ ப்ளூ மற்றும் பான்டோன் பாராசூட் பர்பிள் ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம்.
மோட்டோ ஜி67 பவர் 5ஜி அம்சங்கள் (Moto g67 Power 5G Specifications): குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மெயின் கேமராவுக்கு எப்/1.8 அபெர்சர் கிடைக்கிறது. மேலும், சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாரும் வருகிறது.
அல்ட்ரா வைடு கேமராவுக்கு எப்/2.2 அபெர்சர் கிடைக்கிறது. 4K 30fps வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ள முடியும். இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட்டை இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.
அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது. 6.7 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இருப்பினும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சனை கொடுத்து இருக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட டிஸ்பிளேவாக இருக்கிறது.
1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது. 30W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரியுடன் இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.6 எம்எம் தடிமன் கொண்டுள்ளது. மொத்தமாக 210 கிராம் எடை கொடுத்துள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளன.
மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுத்து இருக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டியை கொடுத்து இருக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications