Home
Mobile

SALE பிச்சிக்குது.. ஆஃபரில் Moto 5G போன்.. 7000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் பிளிப்கார்ட் ஓஎம்ஜி கேட்ஜெட்ஸ் சேல் (Flipkart OMG Gadgets Sale) என்னும் சிறப்பு விற்பனையில் மோட்டோ ஜி67 பவர் 5ஜி (Moto g67 Power 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. 7000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களுடன் வாங்க கிடைக்கிறது. இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை பார்க்கலாம்.

இப்போது, பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 5 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.17,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.15,999 விலைக்கு இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

SALE பிச்சிக்குது.. ஆஃபரில் Moto 5G போன்.. 7000mAh பேட்டரி.. மாடல்?

பான்டோன் சிலன்ட்ரோ (PANTONE Cilantro), பான்டோன் பாராசூட் பர்பிள் (PANTONE Parachute Purple) மற்றும் பான்டோன் குராக்கோ ப்ளூ (PANTONE Curacao Blue) ஆகிய மூன்று கலர்களில் இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Splash Resistance) கொடுக்கப்பட்டு உள்ளது.

மோட்டோ ஜி67 பவர் 5ஜி அம்சங்கள் (Moto g67 Power 5G Specifications): 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (4nm Octa Core Snapdragon 7s Gen 2) சிப்செட்டை இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.

பட்ஜெட் விலை மாடலாக இருப்பதால், 1 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் கிடைக்கிறது. 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் பிஓஎல்டி டிஸ்பிளே கிடைக்கவில்லை. 6.7 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொண்டுள்ளது.

மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் மற்றும் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + மேக்ரோ ஆப்ஷன் கொண்டுள்ளது.

32 எம்பி செல்பீ கேமராவை இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மூன்று நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி 7000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 33W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் (TurboPower Fast Charging) கொடுக்கப்பட்டு உள்ளது. சிலிகான் கார்பன் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆகவே, ஓரளவுக்கு ஸ்லிம் பாடியை எதிர்பார்க்கலாம்.

இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தும் 8.6 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. 210 கிராம் எடை கொண்டுள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொடுத்துள்ளது. MIL-STD 810H என்னும் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கும் சர்டிபிகேஷன் கொடுக்கப்பட்டு உள்ளது.

Best Mobiles in India

English summary
Moto g67 Power 5G With 8GB RAM Available At Discounted Price on Flipkart OMG Gadgets Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X