நவ.5-க்கு அப்புறம் மொத்தமா மிரளும்.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. SONY கேமரா.. 30W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி67 பவர் 5ஜி (Moto G67 Power 5G) ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த பீச்சர்களும் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன. 7000mAh பேட்டரி, சோனி சென்சார் மெயின் கேமரா, கார்னிங் கொரில்லா கிளாஸ் டிஸ்பிளே மற்றும் 30W ஃபாஸ்ட் சா்ஜிங் போன்ற பீச்சர்களில் பட்டையை கிளப்புகிறது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் கொண்ட இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விற்பனை மற்றும் பட்ஜெட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மோட்டோ ஜி67 பவர் 5ஜி அம்சங்கள் (Moto G67 Power 5G Specification): இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorila Glass 7i) புரொடெக்சன் கிடைக்கிறது.

மேலும், அக்வா டச் (Aqua Touch) மற்றும் ஆன்டி ஃபிங்கர்பிரிண்ட் கோட்டிங் (Anti Fingerprint Coating) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Octa Core Qualcomm Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் கிடைக்கிறது. அட்ரினோ ஜிபியு (Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. 24 ஜிபி வரையில் விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + ஃபிளிக்கர் சென்சாருடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. மெயின் கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) மற்றும் சோனி எல்ஒய்டிஐஏ (Sony LYTIA 600) சென்சார் கிடைக்கிறது. அதேபோல 32 எம்பி செல்பீ கேமராவிலும் குவாட் பிக்சல் டெக்னாலஜி கிடைக்கிறது.
8X டிஜிட்டல் ஜூமிங், ஆட்டோ நைட் விஷன், ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர், ப்ரோ மோட், நைட் விஷன், அல்ட்ரா-ரெஸ் போன்ற கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. அதேபோல பேஸ் ரீடச், செல்பீ போட்டோ மிரர் மற்றும் போட்டோ பூத் போன்ற பீச்சர்களையும் கொடுக்கிறது. அல்ட்ரா எச்டி வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஆடியோ ஜூம் சப்போர்ட் கொடுக்கிறது.
இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போனில் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. வீகன் லெதர் பேனலுடன் IP64 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. வை-பை 802, ப்ளூடூத் 5.1 சப்போர்ட் உள்ளது.
பான்டோன் பாராசூட் பர்பிள் (PANTONE Parachute Purple), பான்டோன் ப்ளூ குராக்கோ (PANTONE Blue Curacao) மற்றும் பான்டோன் சிலன்ட்ரோ (PANTONE Cilantro) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. நவம்பர் 5ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ரூ.20,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








