ஆளுக்கு 2 ஆர்டர்.. வெறும் ரூ.14,999 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. SONY கேமரா.. 33W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டருக்கு மேல் ஆர்டர் போடும்படியான பட்ஜெட்டில் மோட்டோ ஜி67 பவர் 5ஜி (Moto g67 Power 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த விலைக்கு 7000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ டிஸ்பிளே, சோனி சென்சார் மெயின் கேமரா போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் சிப்செட் கொண்ட இந்த மோட்டோ ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மோட்டோ ஜி67 பவர் 5ஜி அம்சங்கள் (Moto g67 Power 5G Specifications): இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமல்லாமல், 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் கிடைக்கிறது.

பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு கொண்ட 6.7 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
மேலும், 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கிறது. இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + மேக்ரோ ஆப்ஷன் கிடைக்கிறது. மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் மற்றும் 4K ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த கேமராவிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது. 7000mAh பேட்டரி மற்றும் 33W டர்போசார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.6 எம்எம் தடிமன் மற்றும் 210 கிராம் எடை வருகிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கிடைக்கிறது.
இதுபோக MIL-STD 810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கிறது. இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போனில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் கிடைக்கின்றன. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.15,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.1000 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கிறது.
மேலும், ரூ.1500 தள்ளுபடி ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கும் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போனில் பான்டோன் சிலன்ட்ரோ (PANTONE Cilantro), பான்டோன் குராக்கோ ப்ளூ (PANTONE Curacao Blue) மற்றும் பான்டோன் பாராசூட் பர்பிள் (PANTONE Parachute Purple) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








