Home
Mobile

பயங்கர டிமாண்ட்.. ஆஃபர் விலையில் 7000mAh பேட்டரி Moto போன்.. 33W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் 7000mAh பேட்டரி கொண்ட மோட்டோ ஜி67 பவர் 5ஜி (Moto g67 Power 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4என்எம் (Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட்டுடன் கிடைக்கும் இந்த மேட்டோ ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரியுடன் ரூ.18,999 விலைக்கு இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. மேலும், ரூ.950 பேங்க் தள்ளுபடியை தகுதியான பேங்க் கார்டுகளை பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.18,049 விலைக்கு வாங்கி கொள்ள முடியும். ஈஎம்ஐ சலுகை, எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது.

பயங்கர டிமாண்ட்.. ஆஃபர் விலையில் 7000mAh பேட்டரி Moto போன்.. மாடல்?

மோட்டோ ஜி67 பவர் 5ஜி அம்சங்கள் (Moto g67 Power 5G Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு கொண்ட 6.7 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி கொடுத்துள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது.

மேலும், 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட்டுடன் தரமான பர்ஃபாமென்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) அப்டேட் இன்த மாடலுக்கு கிடைக்கிறது.

3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த சிப்செட்டுக்கு அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. எப்/1.8 அபெர்சர் அபெர்சர் மற்றும் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

மேலும், குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கிடைக்கிறது. எப்/2.2 அபெர்சர் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு மேக்ரோ ஆப்ஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. 4K 30fps வீடியோ ரெக்கார்டிங் கொண்ட கேமராவாக இது இருக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விலைக்கு ஏற்ப IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Splash Resistance) கிடைக்கிறது. மேலும், MIL-STD 810H சர்டிபிகேஷன் கொடுத்துள்ளது. இது மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் சர்டிபிகேஷனாக இருக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) உள்ளது.

33W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. 8.6 எம்எம் தடிமன் மற்றும் 210 கிராம் எடை கொடுக்கிறது. ஆகவே, இது ஸ்லிம் மாடலாக இருக்காது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது.

8 ஜிபிக்கு விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கனெக்டிவிட்டிகளை கொடுத்து உள்ளது. மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போனில் பேன்டோன் சிலன்ட்ரோ (PANTONE Cilantro), பேன்டோன் பாராசூட் பர்பிள் (PANTONE Parachute Purple) மற்றும் பேன்டோன் குராக்கோ ப்ளூ (PANTONE Curacao Blue) ஆகிய 3 கலர் ஆப்ஷன்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
Moto g67 Power 5G With 50MP Camera Get Rs 950 Bank Discount Check Flipkart Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X