Home
Mobile

நாளை விற்பனைக்கு வரும் புது Moto 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. சோனி கேமரா.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் மோட்டோ ஜி67 பவர் 5ஜி (Moto G67 Power 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த புதிய மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது நாளை முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் நாளை (நவம்பர் 12) மதியம் 12 மணி அளவில் இந்த புதிய மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்காலாம்.

நாளை விற்பனைக்கு வரும் புது Moto 5ஜி போன்.. 7000mAh பேட்டரி..

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி67 பவர் 5ஜி போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.14,999 விலையில் வாங்கிவிட முடியும். பான்டோன் சிலன்ட்ரோ (PANTONE Cilantro), பான்டோன் ப்ளூ குராக்கோ (PANTONE Blue Curacao), பான்டோன் பாராசூட் பர்பிள் (PANTONE Parachute Purple) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

மோட்டோ ஜி67 பவர் 5ஜி அம்சங்கள் (Moto G67 Power 5G Specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 chipset) உடன் இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் உள்ளது.

அதேபோல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி67 பவர் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 x 1080பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக 50எம்பி சோனி எல்ஒய்டி-600 சென்சார் (Sony LYT-600 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + two-in-one Flicker கேமரா
என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் இந்த புதிய மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. பின்பு இந்த போனில் 4K வீடியோ பதிவு செய்ய முடியும்.

அதுவும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack),
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோ போன்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த அசத்தலான மோட்டோ ஜி67 பவர் 5ஜி போனில் உள்ளன.

மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் ரூ வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் வெளிவந்துள்ளது. மேலும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) ராணுவ தரத்திலான குவாலிட்டியும் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் மாடல்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

7000mAh பேட்டரி வசதியுடன் மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Moto g67 power 5G will be Sale in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X