Home
Mobile

நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புது Moto 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. சோனி கேமரா.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் நாளை (நவம்பர் 5) இந்தியாவில் மோட்டோ ஜி67 பவர் (Moto G67 Power) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் அறிமுகத்திற்கு முன்பு இந்த மோட்டோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளன.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புது Moto 5ஜி போன்., எந்த மாடல்?

மோட்டோ ஜி67 பவர் அம்சங்கள் (Moto G67 Power Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய மோட்டோ ஜி67 பவர் போன் வெளிவரும். மேலும் இந்த போனின் டிஸ்பிளேவில் 1,080×2,400 பிக்சல்ஸ், எச்டிஆர் 10, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 chipset) உடன் இந்த மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போன் இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ் பெற்றுள்ளது.

மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி சோனி எல்ஒய்டி-600 சென்சார் (Sony LYT-600 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா ஆகிய கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. அதுவும் இந்த போனில் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் ( dust and splash resistance) ஆதரவு கொண்டுள்ளது மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புது Moto 5ஜி போன்., எந்த மாடல்?

மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த சாதனத்தில் உள்ளன. குறிப்பாக இந்த மோட்டோ ஜி67 பவர் போன் நாளை மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் அறிமுகமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G67 Power 5G will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X