Home
Mobile

புது Moto 5ஜி போன் அறிமுகம்.. IP69 ரேட்டிங்.. சோனி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி66ஜே 5ஜி (Moto G66j 5G) ஸ்மார்ட்போனை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐபி69 ரேட்டிங், டைமன்சிட்டி சிப்செட், ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய மோட்டோ போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோ ஜி66ஜே 5ஜி அம்சங்கள் (Moto G66j 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி66ஜே 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 x 1080பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) மற்றும் பல அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

புது Moto 5ஜி போன் அறிமுகம்.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்? என்ன விலை?

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 (MediaTek Dimensity 7060) சிப்செட் வசதியுடன் மோட்டோ ஜி66ஜே 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

50எம்பி சோனி எல்ஒய்டி-600 மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி66ஜே 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இந்த மோட்டோ ஜி66ஜே 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு இந்த மோட்டோ ஜி66ஜே 5ஜி போனில் உள்ளது. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (stereo speakers), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), டூயல் மைக்ரோபோன்கள்(dual microphones), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) உள்ளிட்ட சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

புது Moto 5ஜி போன் அறிமுகம்.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்? என்ன விலை?

5ஜி, வைஃபை 5, புளூடூத் 5.3,என்எப்சி, டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மோட்டோ ஜி66ஜே 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் பான்டோன் பிளாக் Oyster, பான்டோன் டில், பான்டோன் கிரே மிஸ்ட் உள்ளிட்ட நிறங்களில் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

5200எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த மோட்டோ ஜி66ஜே 5ஜி போனின் விலை JPY 34,800 (இந்திய மதிப்பில் ரூ.20,628) ஆக உள்ளது. மேலும் இந்த மோட்டோ ஜி66ஜே 5ஜி போன் மற்ற நாடுகளில் மோட்டோ ஜி66 5ஜி எனும் பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo credit: gizmochina

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G66j 5G launched in Japan: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X