ஆர்டர் தூள் பறக்க போகுது.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஏப்.16-இல் வரும் மோட்டோ 5ஜி போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரல் 16-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் ஆனது டைமன்சிட்டி சிப்செட், 6000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
அதேபோல் மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த மோட்டோ ஜி64 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

மோட்டோ ஜி64 5ஜி அம்சங்கள் (Moto G64 5G specifications): 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 சிப்செட் (MediaTek Dimensity 7025 SoC) வசதியைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய மோட்டோ போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
அதேபோல் ஐபி52 ரேட்டிங், டால்பி அட்மாஸ் ஆடியோ அம்சம், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), பேஸ் அன்லாக் (face unlock) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ போன். குறிப்பாக மோட்டோ ஜி64 5ஜி போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி64 5ஜி போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

6000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 30 வாட்ஸ் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது புதிய மோட்டோ போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின எடை 192 கிராம் எடை கொண்டது. மேலும் இந்த புதிய மோட்டோ ஜி64 5ஜி போன் ஆனது ரூ.20,000-க்குள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications