50எம்பி கேமராவுடன் களமிறங்கும் Moto G62 போன்: எப்போது அறிமுகம் தெரியுமா?
மோட்டோரோலா நிறுவனம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி இந்தியாவில் அற்புதமான மோட்டோ ஜி62 ( Moto G62) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி62
அதாவது வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி மதியம் 12 மணி அளவில் மோட்டோ ஜி62 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த மோட்டோ ஜி62 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப்பார்ப்போம்.

ஐபிஎஸ் டிஸ்பிளே வசதி
புதிய மோட்டோ ஜி62 ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதி உள்ளது. எனவே இந்த போனை பிடித்து பயன்படுத்த அருமையாகஇருக்கும் என்றுதான் கூறவேண்டும்.
பின்பு 1,080x2,400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் உள்ளிட்ட பலசிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் சிப்செட்
விரைவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி62 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவேஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
குறிப்பாக இந்த புதிய மோட்டோ போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் மெமரி கார்டைபயன்படுத்த இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமான கேமரா
மோட்டோ ஜி62 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி சென்சார் (f/1.8) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.
மேலும் செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவரும் இந்த அசத்தலான மோட்டோ ஜி62 ஸ்மார்ட்போன்.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
IP52 மதிப்பீடு, டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் போன்ற பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தைகொடுக்கும் என்றே கூறலாம்.

பாஸ்ட் சார்ஜிங் வசதி
மோட்டோ ஜி62 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும்.அதேபோல் 20W டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி?
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், என்எப்சி போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலானமோட்டோ ஜி62 ஸ்மார்ட்போன் மாடல். 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படுவதால் கண்டிப்பாக இந்த புதிய போன் பயனுள்ள வகையில் இருக்கும்.

என்ன விலை?
இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த புதிய மோட்டோ ஜி62 ஸ்மார்ட்போன் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மோட்டோ ஜி62 போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

உலகின் முதல் 200எம்பி கேமரா ஸ்மார்ட்போன்
அதேபோல் உலகின் முதல் 200எம்பி கேமரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா. அதாவது இந்நிறுவனம் விரைவில் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் தான் 200எம்பி கேமராவசதியும் உள்ளது.
மேலும் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதிஉள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications