50 எம்பி டிரிபிள் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ ஜி62 5ஜி அறிமுகம்!
ஸ்னாப்டிராகன் 480 ப்ளஸ் எஸ்ஓசி, டிரிபிள் ரியர் கேமராக்கள் உள்ளிட்ட அம்சங்களோடு மோட்டோ ஜி62 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போனானது கிராஃபைட் மற்றும் பச்சை வண்ண விருப்பங்களில் வெளி வந்திருக்கிறது. இந்த சாதனத்தின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த விவரங்களை மோட்டோரோலா இதுவரை அறிவிக்கவில்லை.

5ஜி ஆதரவோடு கூடிய மோட்டோ ஜி62 5ஜி
மோட்டோரோலா நிறுவனம் 5ஜி ஆதரவோடு கூடிய மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனத்தின் விலை மற்றும் கிடைக்கும் தன்மையை நிறுவனம் இதுவரை பகிரவில்லை. இருப்பினும் இது மலிவு விலை சாதனமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4ஜிபி ரேம் உடன் கூடிய ஸ்னாப்டிராகன் 480 ப்ளஸ் எஸ்ஓசி ஆதரவோடு வெளிவந்திருக்கிறது.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே
இந்த சாதனத்தில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் உடன் கூடிய 6.5 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் 50 எம்பி உடனான டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா ஆதரவைக் கொண்டிருக்கிறது. மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் பாக்ஸ் ஆதரவில் இயங்குகிறது. இது 5000 எம்ஏஎச் பேட்டரி உட்பட 20 வாட்ஸ் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டிருக்கிறது.

மோட்டோ ஜி62 விலை மற்றும் கிடைக்கும் தன்மை
மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. ஸ்மார்ட்போன் தற்போதே நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த சாதனம் கிராஃபைட் மற்றும் பச்சை வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வரும். மோட்டோ நிறுவனம் தற்போது இந்த ஸ்மார்ட்போனை பிரேசிலில் வெளியிட்டுள்ளது. இந்தியா உட்பட பிற சந்தைகளில் மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போன் எப்போது வெளியிடப்படும் என்ற தகவலை நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

மோட்டோ ஜி62 5ஜி சிறப்பம்சங்கள்
மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போனானது டூயல் சிம் (நானோ) ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனமானது ஆண்ட்ராய்டு 12 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வெளி வந்துள்ளது. ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 480 ப்ளஸ் எஸ்ஓசி ஆதரவுடன் கூடிய இந்த சாதனம் 4ஜிபி ரேம் அம்சத்தைக் கொண்டுள்ளது.

மோட்டோ ஜி62 5ஜி கேமரா அம்சங்கள்
மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 50 எம்பி பிரதான கேமரா உடன் கூடிய டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இதில் 50 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி ஹைப்ரிட் அல்ட்ரா வைட் ஆங்கிள் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா ஆதரவு இருக்கிறது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்
மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போனில் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவு இருந்தாலும் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலமாக மெமரி விரிவாக்கம் செய்யும் வசதி இதில் இருக்கிறது. 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5.1 உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகள் இதில் இருக்கிறது. ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு இருக்கிறது. மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போனானது 20 வாட்ஸ் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சம் இதில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications