முழுசா ரூ.3000 விலைக்குறைப்பு.. சர்ர்னு பட்ஜெட் விலைக்கு இறங்கிய Moto போன்.. நம்பி வாங்க 4 காரணங்கள்!
ரூ.15,000 என்கிற பட்ஜெட்டில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாலும் சரி.. அல்லது உங்களுடைய பழைய 4ஜி போனில் இருந்து ஒரு தரமான 5ஜி போனிற்கு அப்கிரேட் ஆக வேண்டுமென்று திட்டமிட்டிருந்தாலும் சரி.. இதுவே அதற்கான சரியான நேரமாக இருக்கும்!
ஏனென்றால் மோட்டோரோலா பிராண்டின் கீழ் வாங்க கிடைக்கும் பெஸ்ட் 5ஜி போன்களில் ஒன்றான மோட்டோ ஜி62 5ஜி (Moto G62 5G) போனின் மீது தரமான விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜி62 5ஜி மாடலின் பழைய மற்றும் புதிய விலை நிர்ணயம் என்ன? இப்போது இதை நம்பி வாங்கலாமா? வேண்டாமா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

மோட்டோ ஜி62 5ஜி மீது ரூ.3000 விலைக்குறைப்பு
லெனோவாவிற்கு சொந்தமான மோட்டோரோலா, அதன் மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போனின் மீது ரூ.3,000 வரையிலான விலைக்குறைப்பை அறிவித்துள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் மீது ரூ.2000 விலைக்குறைப்பும், ஹை-எண்ட் வேரியண்ட் மீது ரூ.3,000 விலைக்குறைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி62 5ஜி பழைய விலை VS புதிய விலை
மோட்டோ ஜி62 5ஜி கடந்த ஆகஸ்ட் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் இதன் 6ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.17,999 க்கு வாங்க கிடைத்தது. தற்போது ரூ.2000 என்கிற விலைக்குறைப்பை பெற்று ரூ.15,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, முன்னதாக ரூ.19,999 க்கு வாங்க கிடைத்த 8ஜிபி ரேம் ஆப்ஷன் தற்போது ரூ.3,000 விலைக்குறைப்பை பெற்று ரூ.16,999 விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோ ஜி62 மீது கிடைக்கும் பிற சலுகைகள்
மிட்நைட் கிரே மற்றும் ஃப்ரோஸ்டட் ப்ளூ என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் இந்த மோட்டோ ஸ்மார்ட்போனின் மீது வேறு சில கூடுதல் சலுகைகளும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை மொபிக்விக் வழியாக வாங்கினால் ரூ.1,000 கேஷ்பேக் கிடைக்கும். ஒருவேளை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு வழியாக வாங்கினால் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும்.
மோட்டோ ஜி62 முக்கிய அம்சங்கள்
ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இயங்கும் மோட்டோ ஜி62 ஸ்மார்ட்போனானது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் 6.55-இன்ச் ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த மை யுஎக்ஸ் (My UX) லேயருடன் வருகிறது.
கேமராக்களை பொறுத்தவரை இது 50எம்பி மெயின் கேமரா (எஃப்/1.8) + 8எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் (எஃப்/2.2) + 2எம்பி மேக்ரோ ஷூட்டர் (எஃப்/2.4) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமராவை (எஃப்/2.45) கொண்டுள்ளது.
நீர் எதிர்ப்பு (ஸ்பிளாஷ்-ரெசிஸ்டண்ட்) திறனுக்கான ஐபி52 ரேட்டிங்கை பெற்றுள்ள மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உள்ளது. அது 20W டர்போ சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. கடைசியாக இதில் ஹைப்ரிட் டூயல் சிம் ஆதரவு மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது.
மோட்டோ ஜி62 5ஜி நம்பி வாங்க 4 காரணங்கள்
மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போன் ஏன் நம்பி வாங்கலாம் என்பதற்கு 4 காரணங்களை சொல்லாம்:
01. மிகவும் க்ளீன் ஆன சாஃப்ட்வேர்
02. நல்ல பெர்ஃபார்மென்ஸ்
03. டீசென்ட் ஆன பேட்டரி லைஃப்
04. மற்றும் திறமையான ஸ்திரீயோ ஸ்பீக்கஸ்
மோட்டோ ஜி62 5ஜி வாங்காமல் தவிர்க்க 2 காரணங்கள்
இந்த ஸ்மார்ட்போனை ஏன் தவிர்க்கலாம் என்பதற்கு 2 காரணங்களை சொல்லாம்:
01. லோ-லைட் போட்டோகிராஃபி என்று வந்துவிட்டால் கொஞ்சம் சுமாரான புகைப்படங்களே கிடைக்கிறது
02. சற்றே மெதுவான ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








