Home
Mobile

Moto G62 5G ரிவ்யூ- இந்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை வாங்கலாமா? வேண்டாமா?

Motorola G Series இந்திய சந்தையில் தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் வெவ்வேறு விலைப் பிரிவில் பல்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

அதன்படி டால்பி அட்மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் கூடிய Moto G62 5G ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் ரிவ்யூவை தான் பார்க்கப்போகிறோம்.

ஸ்மார்ட்போனை வாங்கலாமா, வேண்டாமா?

ஸ்மார்ட்போனை வாங்கலாமா, வேண்டாமா?

Moto G62 5G ஸ்மார்ட்போனானது இரண்டு வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது. அது 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆகும்.

6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.17,999 எனவும் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.19,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மிட் ரேன்ஜ் விலைப் பிரிவில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாமா, வேண்டாமா என்பது குறித்து பார்க்கலாம்.

குறிப்பிடத்தக்க அம்சங்கள்

குறிப்பிடத்தக்க அம்சம்

120Hz டிஸ்ப்ளே

டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்கள்

IP52 மதிப்பீடு

கொஞ்சம் மேம்பட்டு இருக்கலாம்

மோட்டோவின் வழக்கமான வடிவமைப்பு

ஃபாஸ்ட் சார்ஜிங் அமைப்பு சிறப்பாக இல்லை

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

  • 6.5 இன்ச் 120Hz FHD+ IPS LCD டிஸ்ப்ளே
  • ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்
  • 8 ஜிபி ரேம்
  • 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
  • 50 எம்பி குவாட் பிக்சல் டிரிபிள் கேமராக்கள்
  • 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5000 எம்ஏஎச் பேட்டரி
  • MyUI உடனான Android 12 ஓஎஸ்
  • டிஸ்ப்ளே அமைப்பு

    டிஸ்ப்ளே அமைப்பு

    Moto G62 5G ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே குறித்து பார்க்கையில், 6.5 இன்ச் எல்சிடி பேனல், 2400 x 1080 பிக்சல் தீர்மானம், FHD+ தெளிவுத்திறன் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே திரைப்படங்கள் பார்ப்பதற்கும், கேம்கள் விளையாடுவதற்கும் ஏற்றதாக இருக்கிறது. இதன் காட்சி அனுபவமான மிக மென்மையாகவே இருக்கிறது. டிஸ்ப்ளே அடிப்படையில் இந்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனில் குறை எதுவும் கூறிவிட முடியாது.

    Moto G62 5G கேமரா விமர்சனம்

    Moto G62 5G கேமரா விமர்சனம்

    Moto G62 5G கேமரா குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 50MP Quad Pixel முதன்மை லென்ஸ் உடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் 8MP அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ ஷூட்டர் உள்ளடக்கியது.

    இந்த கேமராவானது நைட் மோட், டூயல் கேப்சர், போர்ட்ரெய்ட் மோட் போன்ற பல ஆதரவுகளை கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனில் 16MP செல்பி கேமரா இருக்கிறது.

    நைட் மோட் ஆப்ஷன் சிறப்பாக இல்லை

    Moto G62 5G கேமராக்கள் ஆனது Moto G71 5G மற்றும் Moto G51 5G போன்றே செயல்படுகிறது. அதாவது நல்ல வெளிச்சம் உள்ள சூழலில் சிறந்த படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போன் அனுமதிக்கிறது.

    இதில் நைட் மோட் ஆப்ஷன் இருந்தாலும், வெளிச்சம் குறைவான இடத்தில் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை.

    இயக்க ஆதரவு எப்படி உள்ளது?

    இயக்க ஆதரவு எப்படி உள்ளது?

    Moto G62 5G ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு இதில் பொருத்தப்பட்டுள்ள சிப்செட் மிகவும் ஏதுவாக இருக்கிறது.

    தினசரி பயன்பாடுகளில் இந்த சிப்செட் மிக சிறப்பாகவே செயல்படுகிறது. இதில் உள்ள மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். பெயர் குறிப்பிடுவது போல் 5ஜி ஆதரவை இது கொண்டிருக்கிறது.

    இதில் பொருத்தப்பட்டுள்ள சிப்செட் 12 5G பேண்டுகள் வரை ஆதரிக்கிறது. எனவே மிட்ரேன்ஜ் விலைப் பிரிவில் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்புவர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தேர்வாக இருக்கும்.

    Moto G62 5G செயல்திறன் அடிப்படையில் எப்படி?

    Moto G62 5G செயல்திறன் அடிப்படையில் எப்படி?

    Moto G62 5G ஸ்மார்ட்போனானது சமூகவலைதள பயன்பாடு மற்றும் வீடியோக்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.

    இந்த விலைப் பிரிவில் கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை மையமாக வைத்து பார்க்கும் போது, கேமரா அடிப்படையில் இது சிறந்த ஸ்மார்ட்போன் தான்.

    Dolby Atmos ஆதரவு என்பது இதன் குறிப்பிடத்தக்க அம்சமாகும். சிறப்பான ஒலி வெளியீட்டு ஆதரவை இந்த ஸ்மார்ட்போன் வழங்குகிறது.

    Moto G62 5G பேட்டரி விமர்சனம்

    Moto G62 5G பேட்டரி விமர்சனம்

    Moto G62 5G ஸ்மார்ட்போனில் 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய பேட்டரி தான். ஆனால் இதை சார்ஜ் செய்வதற்கு போதுமான ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இல்லை.

    இந்த ஸ்மார்ட்போனில் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மட்டுமே இருக்கிறது. எனவே இதன் மூலம் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணிநேரம் ஆகும்.

    அதேபோல் இதில் 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதும் நீடித்த பேட்டரி ஆயுளை வழங்குகிறது.

    Moto G62 5G வாங்கலாமா., வேண்டாமா?

    Moto G62 5G வாங்கலாமா., வேண்டாமா?

    120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே போன்ற ப்ரீமியம் அம்சங்களைக் கொண்ட சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது. அதேபோல் இதில் உள்ள சிறப்பான 5ஜி ஆதரவு ஸ்மார்ட்போனுக்கு ப்ளஸ் பாயிண்டாக இருக்கிறது. ஒரு சில குறைபாடுகள் குறிப்பிட்டிருந்தாலும் மிட் ரேன்ஜ் விலைப் பிரிவு ஸ்மார்ட்போன்களை வாங்க திட்டமிட்டிருந்தால் இது சிறந்த தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Moto G62 5G Review: Newly launched Moto Mid Range Smartphone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X