பட்ஜெட் விலையில் 5ஜி வசதியுடன் அறிமுகமான Moto G62 5G! விற்பனை மற்றும் சலுகை விபரம்!

|

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் புதிதாக மோட்டோ ஜி62 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், Moto G62 5G ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் 7வது Moto G சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலாகும். சில நாட்களுக்கு முன்பு தான் மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ ஜி32 என்ற மாடலை அறிமுகம் செய்தது.

பட்ஜெட் செக்மென்ட் பிரிவில் அறிமுகமான புது Moto G62 5G

பட்ஜெட் செக்மென்ட் பிரிவில் அறிமுகமான புது Moto G62 5G

அதனைத் தொடர்ந்து, மோட்டோரோலா நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை இப்போது இந்தியாவில் நடத்தியுள்ளது. இந்தியாவில் Moto G62 ஸ்மார்ட்போன் பட்ஜெட் செக்மென்ட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக சில சலுகைகளும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

மோட்டோ ஜி62 விலை விபரம்

மோட்டோ ஜி62 விலை விபரம்

மோட்டோரோலா நிறுவனம் இந்த புதிய Moto G62 ஸ்மார்ட்போன் மாடலை 2 ஸ்டோரேஜ் விருப்பத்துடன் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஒரு மாடல், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் விலை ரூ. 17,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இந்த Moto G62 5G டிவைஸின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ.19,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

SBI பயனர்களே அலெர்ட்! இனி ATM-ல் பணம் எடுக்க 'இது' கட்டாயம்!SBI பயனர்களே அலெர்ட்! இனி ATM-ல் பணம் எடுக்க 'இது' கட்டாயம்!

Moto G62 5G மீது கிடைக்கும் சலுகை விவரங்கள்

Moto G62 5G மீது கிடைக்கும் சலுகை விவரங்கள்

Moto G62 5G ஸ்மார்ட்போன் மீது கிடைக்கும் சலுகைகள் பற்றிப் பார்க்கையில், இந்த புதிய சாதனத்தை HDFC கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் போது, ரூ. 1,750 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இத்துடன் ரூ. 5,049 மதிப்புள்ள நன்மைகளும் உங்களுக்குக் கிடைக்கிறது. இதில், ரூ. 549 மதிப்புள்ள Zee5 வவுச்சர் மற்றும் ரூ. 500 மதிப்புள்ள Myntra வவுச்சர் உட்பட ரிலையன்ஸ் ஜியோவின் தற்போதைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சில நன்மைகளும் கிடைக்கிறது.

Moto G62 5G ஸ்மார்ட்போனின் விற்பனை எப்போதிலிருந்து துவங்குகிறது?

Moto G62 5G ஸ்மார்ட்போனின் விற்பனை எப்போதிலிருந்து துவங்குகிறது?

Moto G62 5G ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், இந்தியாவின் Flipkart வலைத்தளத்திற்கு நேரடியாகச் சென்று பர்ச்சேஸ் செய்யலாம். அதேபோல், இந்த புதிய Moto G62 5G ஸ்மார்ட்போன் மாடலை வாடிக்கையாளர்கள் பிற ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாகவும் வாங்கி பயன்பெறலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதன் விற்பனை வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் மதியம் 12 மணிக்குத் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்ரஸ் ப்ரூப் இல்லாமல் ஆதார் முகவரியை மாற்ற முடியுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!அட்ரஸ் ப்ரூப் இல்லாமல் ஆதார் முகவரியை மாற்ற முடியுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!

Moto G62 5G சிறப்பம்சம்

Moto G62 5G சிறப்பம்சம்

Moto G62 5G டிவைஸ் 6.5' இன்ச் கொண்ட முழு HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெப்பிரஷ் ரேட் உடன் 240Hz டச் சாம்ப்ளிங் வீதத்துடன் வருகிறது. இந்த சாதனம் Qualcomm Snapdragon 695 5G சிப்செட் மூலம் இயங்குகிறது. இது இந்தியாவில் 12 பேண்ட் 5G இணைப்புடன் செயல்படுகிறது. முன்பே பார்த்தது போல, இது 6GB + 128GB மற்றும் 8GB + 128GB ஸ்டோரேஜ் விருப்பத்தில் வருகிறது. இது ஸ்டாக் ஆண்ட்ராய்டு 12 இல் இயங்குகிறது.

கேமரா மற்றும் பேட்டரி விபரங்கள்

கேமரா மற்றும் பேட்டரி விபரங்கள்

கேமரா பற்றி பேசுகையில், இந்த டிவைஸ் 50 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா-வைட் மற்றும் 2எம்பி மேக்ரோ சென்சார் கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்புடன் வருகிறது. இதன் முன்பக்கத்தில் 16 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. இந்த சாதனம் 5,000mAh கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் ஆடியோ டெலிவரிக்காக டால்பி அட்மோஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க விருப்பம் இருந்தால் வரும் ஆகஸ்ட் 19ம் தேதியை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Moto G62 5G Budget Smartphone Launched In India, Sale Date, Bank Offers And Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X