மோட்டோ ஜி60எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
பிரேசிலில் மோட்டோ ஜி60எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர தரமான சிப்செட் வசதி, 6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது மோட்டோ ஜி60எஸ் ஸ்மார்ட்போன்.

குறிப்பாக மோட்டோ ஜி60எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் மேக்ஸ் விஷன் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

இந்த புதிய மோட்டோ ஜி60எஸ் ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஜி60எஸ் ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி60எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக மோட்டோ ஜி60எஸ் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு நீண்ட நேரம் கேம் விளையாட இந்த ஸ்மார்ட்போன் அருமையாக பயன்படும் என்றே கூறலாம். அதேபோல் 50 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ ஜி60எஸ் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

4 ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி 5, 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி60எஸ் ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிககவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி60எஸ் சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.32,000-ஆக உள்ளது. குறிப்பாக மோட்டோ ஜி60எஸ் சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications