108 எம்பி கேமராவுடன் வரும் மோட்டோ ஜி60: எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தகவல்கள்!
மோட்டோ நிறுவனம் ஜி தொடரில் சில ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இரண்டு ஸ்மார்ட்போன்கள் இதில் இடம்பெறும் எனவும் இதில் ஒன்று மோட்டோ ஜி60 சாதனம் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 108 எம்பி முதன்மை கேமராவுடனும் முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமராவுடன் வரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் வெளியான தகவலை போன்றே தற்போது டிப்ஸ்டர் வெளியிட்ட புகைப்படம் மூன்று பின்புற கேமரா அமைப்பை கொண்டிருக்கிறது.

மூன்று கேமரா அமைப்பு
இந்த கசிவு தகவல் முகுல்ஷர்மாவின் மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது. மூன்று கேமரா அமைப்புடன் இது வரும் என கூறப்பட்டாலும் இந்த ஸ்மார்ட்போனில் குவாட் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. காரணம் இதில் உள்ள ஒரு கேமரா மற்றொரு சென்சார் பணியையும் கையாளும் என கூறப்படுகிறது. இதுதொடர்பான கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

108 மெகாபிக்சல் சென்சார்
முகுல்சர்மா பகிர்ந்த படத்தின் காணப்பட்ட தகவலின்படி இதன் பின்புறத்தின் மேல் இடது மூலையில் செவ்வக வடிவ கேமரா தொகுப்பை கொண்டிருப்பதை காட்டுகிறது. செங்குத்து வடிவில் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்சல் சென்சாருடன் வரும் என டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் உறுதிப்படுத்தியுள்ளார். அதேபோல் ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை சென்சார் இருக்கும் எனவும் மோட்டோரோலா லோகோ இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

அதிநவீன தொழில்நுட்ப வசதி
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி60, மோட்டோ ஜி20 ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஆன்லைனில் வெளிவந்த தகவல்
மோட்டோ ஜி60 ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி மோட்டோரோலா மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸபிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6ஜிபி ரேம், 12ஜிபி மெமரி, ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் வசதி மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுகளுடன் வெளிவரும் இந்த மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன்.மோட்டோ ஜி60 ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி மோட்டோரோலா மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸபிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6ஜிபி ரேம், 12ஜிபி மெமரி, ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் வசதி மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுகளுடன் வெளிவரும் இந்த மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன்.

108எம்பி ரியர் கேமரா
அதேபோல் இந்த மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனில் 108எம்பி ரியர் கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது. பின்பு 16எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா என பல்வேறு அசத்தலான அம்சங்கள் இந்த சாதனத்தின் அடக்கம் என்று கூறப்படுகிறது.

மோட்டோ ஜி20
மேலும் மோட்டோ ஜி20 ஸ்மார்ட்போன் மாடல் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜ்ங் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி20 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோ ஜி50 அம்சங்கள்
சமீபத்தில் மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போனானது 5ஜி அம்சத்தோடு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் ஸ்னாப்டிராகன் 480 5ஜி எஸ்ஓசி உடன் இயக்கப்படுகிறது. அதோடு இதில் 90 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே அம்சம் இருக்கிறது. மோட்டோரோலா மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இது 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்ஜிடி எச்டி+ ரெசல்யூஷன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. டிஸ்ப்ளே மேற்புற நடுவில் வி-வடிவ செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது எஸ்ஓசி 8 என்எம் செயல்பாட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்பில் வருகிறது. அதேபோல் 128ஜிபி உள்சேமிப்பு விருப்பத்திலும் கிடைக்கும். மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications