Home
Mobile

இந்தியாவில் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃபியூஷன் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃபியூஷன் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது.

இந்த இரண்டு சாதனங்களும் பிளிப்கார்ட்

குறிப்பாக இந்த இரண்டு சாதனங்களும் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி60 அம்சங்கள்

மோட்டோ ஜி60 அம்சங்கள்

டிஸ்பிளே: 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
எச்டிஆர் 10 ஆதரவு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஒசி
ரேம்: 6ஜிபி
மெமரி: 128ஜிபி
ரியர் கேமரா: 108எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 32எம்பி
பேட்டரி: 6000 எம்ஏஎச் பேட்டரி
டர்போபவர் 20 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
புளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக்,
வைஃபை 802.11 ஏசி, என்எப்சி,
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

மோட்டோ ஜி60 விலை

மோட்டோ ஜி60 விலை

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி60 ஸ்மாரட்போனின் விலை ரூ.17,999-ஆக உள்ளது. மேலும் வரும் ஏப்ரல் 27-ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். பின்பு இந்த வலைத்தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும். அதேபோல் டைனமிக் கிரே மற்றும் Frosted Champagne நிறங்களில் இந்த புதிய சாதனம் விற்பனைக்கு வரும்.

மோட்டோ ஜி40 ஃபியூஷன் அம்சங்கள்

மோட்டோ ஜி40 ஃபியூஷன் அம்சங்கள்

டிஸ்பிளே: 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
எச்டிஆர் 10 ஆதரவு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஒசி
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் +8எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 6000 எம்ஏஎச் பேட்டரி
டர்போபவர் 20 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
புளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக்,
வைஃபை 802.11 ஏசி, என்எப்சி,
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

மோட்டோ ஜி40 ஃபியூஷன் விலை

மோட்டோ ஜி40 ஃபியூஷன் விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி40 ஃபியூஷன் ஸ்மாரட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. மேலும் இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. வரும் மே 1-ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். பின்பு இந்த வலைத்தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி மோட்டோ ஜி40 ஃபியூஷன் ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 வரை தள்ளுபடி கிடைக்கும். அதேபோல் டைனமிக் கிரே மற்றும் Frosted Champagne நிறங்களில் இந்த புதிய சாதனம் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Moto G60, Moto G40 Fusion Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X