அசத்தலான அம்சங்களுடன் விரைவில் களமிறங்கும் மோட்டோ ஜி60, ஜி20 ஸ்மார்ட்போன்கள்.!
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி60, மோட்டோ ஜி20 ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் அதிநவீன தொழில்நுட்ப வசததியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மோட்டோ ஜி60
ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி மோட்டோரோலா மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ்
டிஸபிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6ஜிபி ரேம், 12ஜிபி மெமரி, ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் வசதி மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுகளுடன் வெளிவரும் இந்த மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன்.

அதேபோல் இந்த மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனில் 108எம்பி ரியர் கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது. பின்பு 16எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா என பல்வேறு அசத்தலான அம்சங்கள் இந்த சாதனத்தின் அடக்கம்என்று கூறப்படுகிறது.

மோட்டோ ஜி20
மேலும் மோட்டோ ஜி20 ஸ்மார்ட்போன் மாடல் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜ்ங் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி20 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோ ஜி50
இந்த மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போனானது 5ஜி அம்சத்தோடு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் ஸ்னாப்டிராகன் 480 5ஜி எஸ்ஓசி உடன் இயக்கப்படுகிறது. அதோடு இதில் 90 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே அம்சம் இருக்கிறது.
மோட்டோரோலா மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இது 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்ஜிடி எச்டி+ ரெசல்யூஷன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. டிஸ்ப்ளே மேற்புற நடுவில் வி-வடிவ செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது எஸ்ஓசி 8 என்எம் செயல்பாட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்பில் வருகிறது. அதேபோல் 128ஜிபி உள்சேமிப்பு விருப்பத்திலும் கிடைக்கும். மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

மோட்டோ ஜி50 கேமரா
மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், இதில் 48 எம்பி பிரதான கேமரா, 5எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி ஆழ சென்சார் என மூன்று கேமராக்கள் இருக்கிறது. அதேபோல் இதன் பின்புற கேமரா வடிவமைப்பில் 4கே வீடியோ பதிவு செய்ய முடியாது. மேலும் முன்புற கேமரா அம்சம் குறித்து பார்க்கையில், இதில் 13எம்பி செல்பி கேமரா இருக்கிறது. மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வேகமான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு சிம்கார்ட் ஸ்லாட்கள் மற்றும் 5ஜி இணைப்பு இருக்கிறது. ப்ளூடூத் வி5.0, வைஃபை மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகள் உள்ளன.


Click it and Unblock the Notifications